8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை தொடங்கி இருக்கிறது. 8ஆவது சம்பள கமிஷனில் நிச்சயமாக அரசு ஊழியர்களின் சம்பளம் பல மடங்கு உயரும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதற்கு காரணமாக முன்வைப்பது ஏழாவது சம்பள கமிஷனில் கிடைத்த அகவிலைப்படி உயர்வை தான். இந்தியாவில் சம்பள கமிஷன் அடிப்படையில் தான் அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதிய தொகையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு சம்பளம் மாற்றி அமைக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை விலைவாசி மற்றும் பண வீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்களின் சம்பளத்தோடு அகவிலைப்படி என்பது வழங்கப்படுகிறது.

2006 முதல் 2016 வரையிலான 6ஆவது சம்பள கமிஷன் காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு 125 சதவீதமாக இருந்தது. அதாவது அடிப்படை சம்பளத்தில் 125 சதவீதத்தை அகவிலைப்படியாக பெற்றனர். இதுவே 1996 முதல் 2006 வரையிலான 5ஆவது சம்பள கமிஷனில் 74 சதவீதமாக இருந்தது.
தற்போது 7ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி என்பது 58% ஆக தான் இருக்கிறது, வரக்கூடிய மார்ச் மாதத்தில் அரசு 2% அகவிலைப்படி உயர்வை வழங்கலாம் என சொல்லப்படுகிறது. எனவே அகவிலைப்படி 60%ஆக உயரலாம். மொத்தமாக 7ஆவது சம்பள கமிஷனில் அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சம் 65% வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால் இது கடந்த சம்பள கமிஷனில் கிடைத்ததில் பாதிதான். இதற்கு முக்கிய காரணம் கொரோனா காலத்தில் 18 மாத காலம் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தாமல் நிறுத்தி வைத்திருந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு செலவினங்களை சுட்டிக்காட்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்திருந்தது. அதனை வழங்குவது தொடர்பாக எந்த முடிவையும் அரசு எடுத்ததாக தெரியவில்லை.
6ஆவது சம்பள கமிஷன் முடியும் போது அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் அனைத்து அலோவென்சுகளும் சேர்த்து 19,200 ரூபாயாகவே இருந்தது. அதாவது இதில் பெரும்பாலான பணம் அகவிலைப்படி உயர்வு தான். சம்பள உயர்வே அடிப்படை சம்பளத்தில் தான் கணக்கிடப்படும் என்பதால் ஒரு சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் போது அகவிலைப்படி பூஜ்ஜியமாகி விடும். 7ஆவது சம்பள கமிஷனில் குறைந்தபட்ச சம்பளம் 23,670 ஆக மாற்றப்பட்டது. எனவே ஊழியர்களுக்கு உண்மையில் கிடைத்தது 14.3% சம்பள உயர்வு கிடைத்தது.
இந்த முறை அகவிலைப்படி உயர்வே குறைவாக தான் இருக்கிறது. சம்பள கட்டமைப்பில் அடிப்படை சம்பளமே அதிகமாக இருக்கிறது என்பதால் 8ஆவது சம்பள கமிஷனில் ஃபிட்மண்ட் ஃபேக்டர் ஒரு சராசரி அளவாக கொண்டாலும் ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வே கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications