7வது சம்பள கமிஷன் 18 மாத கால DA நிலுவைத் தொகை குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் சமீபத்திய உயர்வுக்குப் பிறகு, நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையை எப்போது மத்திய அரசு வழங்கும் என்பது தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளது.
நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி தொகையை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சம்பளத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
18 மாத கால DA நிலுவை
7வது சம்பள கமிஷன் படி 18 மாத கால DA நிலுவை தொகை குறித்துப் புதிதாக வெளியான தகவல் படி, மத்திய அரசு ஊழியர்கள் தொகையைப் பெறுவதில் நம்பிக்கை இழக்கக் கூடாது என அரசு அதிகாரிகள் கூறுவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அகவிலைப்படி அளவு
மத்திய அரசு ஏற்கனவே அகவிலைப்படி அளவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், பொருளாதாரம், வர்த்தகம், நாணய மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையிலும் நிதிப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத நிலுவை அகவிலைப்படி தொகையை மொத்தமாக அளிக்க முடியாது..
3 தவணை
இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 18 மாத DA நிலுவைத் தொகை 3 தவணைகளில் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத காலம் கொரோனா தொற்றுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை அளிக்கப்படாமல் உள்ளது.
3 தவணை திட்டம்
இந்த நிலுவை தொகை தொடர்பான பிரச்சினை குறித்து அமைச்சரவையில் பல முறை விவாதம் செய்து ஆலோசனை செய்யப்பட்டு வந்தாலும், இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இந்த 3 தவணை திட்டமும் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர்.
நிலுவைத் தொகை அளவு
மத்திய அரசு ஊழியர்களின் தரவுகள் படி லெவல் 3 பிரிவு ஊழியர்களுக்கான 18 மாத DA நிலுவைத் தொகை அளவு 11,880 ரூபாயில் இருந்து 37,554 ரூபாயாக இருக்கும். இதுவே லெவல் 14 பிரிவு ஊழியர்களுக்கான 18 மாத DA நிலுவைத் தொகை அளவு 1,44,200 ரூபாயில் இருந்து 2,18,200 ரூபாயாக இருக்கும்.
அகவிலைப்படி
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை (DA) அளவை 31 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்த முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அமைச்சரவை செப்டம்பர் 28 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் ஜூலை 1, 2022 முதல் இந்த உயர்வு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
கூடுதல் நிதி சுமை
இந்த 4 சதவீத உயர்வு மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 31 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்ந்து 47.68 லட்ச மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்ச ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். இந்த அறிவிப்பால் மத்திய அரசுக்கு வருடம் 6,591.36 கோடி ரூபாய் கூடுதல் நிதிச் சுமை உருவாகும்.


Click it and Unblock the Notifications