சென்னை: பொது தேர்தல் நெருங்கும் நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வியாழக்கிழமை மத்திய அமைச்சரவை இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் அகவிலைப்படி 50 சதவீதமாக உயர உள்ளது, மேலும் இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.

மோடி அரசின் இந்த அறிவிப்பின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயனடைவார்கள். இதுமட்டுமின்றி, ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) உயர்வு குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பணிகளில் பணியாற்றி வரும் 49.18 லட்சம் ஊழியர்கள் மற்றும் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடையும் வகையில், நாட்டின் பணவீக்க அளவீட்டை ஒப்பிட்டு மத்திய அமைச்சரவை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் தற்போதைய 46 சதவீதத்தை 4% அதிகரித்து இனி 50 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசுக்கு வருடம் 12,868.72 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டிற்கு இரண்டு முறை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தப்படும். இதில் அகவிலைப்படி என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கானது, அகவிலை நிவாரணம் என்பது மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கானது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு எவ்வளவு?: இந்த 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு மூலம் மத்திய அரசு ஊழியர் ஒருவரது மாத சம்பளம் ரூ.50,000 என்றும், அடிப்படை சம்பளம் ரூ.15,000 என்றும் இருந்தால், தற்போது அவர் அடிப்படை சம்பளத்தில் 46 சதவீதத்தில் ரூ.6,900 அகவிலைபடியாக பெறுகிறார்.
தற்போதைய 4 சதவீத உயர்வுக்குப் பிறகு, ஊழியர் மாதத்திற்கு ரூ.7,500 பெறுவார், இது முந்தைய ரூ.6,900 உடன் ஒப்பிடும்போது ரூ.600 அதிகம். எனவே, ஒருவருக்கு மாத சம்பளம் ரூ.50,000, அடிப்படை சம்பளம் ரூ.15,000 இருந்தால், அவரது சம்பளம் மாதத்திற்கு ரூ.600 உயரும்.
கடந்த அக்டோபர் 2023 இல் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வில், அரசு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய ஈட்டை 4 சதவீதம் உயர்த்தி 46 சதவீதமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications