நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் கட்ட பரவலுக்கும் மத்தியிலும் ஊழியர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் வகையில் ஒரு விஷயம் வந்துள்ளது எனில், அது 7வது சம்பள கமிஷன் தான். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவில் பல்வேறு மாற்றங்களைச் செய்யவுள்ளது.
இதில் பலவும் ஊழியர்களுக்கு சாதகமாக வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக DA, DR, இரவு நேர பணிக்கான சிறப்பு அலவன்ஸ் என பலவும் ஜூலை மாதம் முதல் கொண்டு வரப்படவுள்ளதாகவும் தெரிகிறது.
இதில் குறிப்பாக சில மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சலுகைகளும் நிவாரணமும் அளிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. சரி வாருங்கள் பார்க்கலாம். யாருக்கு என்ன சலுகை என?
AIS ஊழியர்களுக்கு ஸ்பெஷல் அலவன்ஸ் அதிகரிப்பு
அரசின் இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தில் பல மாற்றங்களை பெறுவர். இந்த 7வது சம்பள கமிஷன் AIS அதிகாரிகளுக்கு சிறப்பு கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாகவும் தெரிகிறது. குறிப்பாக லடாக் யூனியன் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ள AIS அதிகாரிகளுக்கு SPECIAL ALLOWANCE அதிகரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம்
இது குறித்து இந்திய அரசின் தரப்பில் செயலாளர் தேவேந்திர குமார், லடாக் யூனியன் பிரதேசத்தில் பணிபுரியும் அகில இந்திய சேவை அதிகாரிகளுக்கு கூடுதல் நிதி ஊக்கத்தொகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது உச்சவரம்புக்கும், அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கும் உட்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் இது குறித்தான கடிதம், அனைத்து மாநில அரசாங்கங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எவ்வளவு கூடுதல் சலுகை?
இந்த ஸ்பெஷல் அலவன்ஸ் என்பது, தற்போது லடாக்கில் பணியில் உள்ள அகில இந்திய சேவை அதிகாரிகளுக்கு, அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 20 சதவீதம் கூடுதல் சிறப்பு சலுகையும், 10 சதவீதம் சிறப்பு பணி கொடுப்பனவும் வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஜுலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் முழு பலனையும் கொடுக்கும் என கூறியிருந்தது. இதன் மூலம் தற்போதுள்ள 17% அகவிலைப்படி, இந்த அதிகரிப்புக்குப் பிறகு 28% (17 + 3 + 4 + 4) ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஏ கணக்கீடு 2021 ஜனவரி முதல் ஜூன் வரை எதிர்பார்க்கப்படும் 4% டிஏ மற்றும் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை அறிவிக்கப்பட்ட 4% டிஏ மற்றும் ஜனவரி முதல் ஜூன் 2020 வரையிலான 3% டிஏ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
இதனால் பலரும் பயன்
இது தவிர, மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி (DA), ஹெச்ஆர்ஏ (HRA) பயணப்படி, மருத்துவ கொடுப்பனவு போன்ற பல்வேறு 7வது ஊதிய கமிஷன் சலுகைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. ஜீலை 2021 முதல் இந்த முடக்கம் நீக்கப்பட்டால், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். இதே சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் இது பயனளிக்கும்.
Array
அரசு ஜூலை 2021 வரை DA மற்றும் DR இரண்டையும் மையம் முடக்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏவில் மாற்றம் செய்யப்படும் போது, ஓய்வூதியதாரர்களுக்கு டிஆரிலும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் இந்த அறிவிப்புகள் முழுவதுமாக நடைமுறைக்கு வரும்போது தான் உண்மை என்னவென்று தெரியவரும். யாருக்கு என்ன சலுகை. எவ்வளவு அதிகரிப்பு என.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications