வரவிருக்கும் ஜூலை முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2021 ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் இருந்த முடக்கம் நீக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் 2021ல் மத்திய ஜீலை மாதம் முதல் இந்த அகவிலைப்படி தொடரப்படும் என அரசு அறிவித்தது. எனினும் தற்போது கொரோனா காரணமாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டம் ஒத்தி வைப்பு
ஏனெனில் ஜே.சி.எம் தேசிய கவுன்சில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் நிதித்துறை அமைச்சக அதிகாரிகள், என பலரும் கலந்துகொள்ளவிருந்த இது குறித்தான கூட்டத்தினை ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் இறுதி முடிவுகள் எட்டப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தள்ளி வைக்கப்படுள்ளது.
மீண்டும் கூட்டம் எப்போது?
இந்த கூட்டம் கடைசியாக 7வது சம்பள கமிஷன் மேட்ரிக்ஸ் சிக்கலை தீர்க்கும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மே கடைசி வாரத்தில் இந்த கூட்டம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ஜூலை 1, 2021 முதல் அகவிலைப்படி உயர்த்த தொடங்கலாம் என கூறியிருந்தார்.
மிகப்பெரிய நிவாரணம்
மத்திய அரசின் இந்த திட்டம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் நிலையில், இது குறித்தான அறிவிப்புகள் மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. ஜூன் வரையில் டிஏ விகிதம் முடக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த அறிவிப்பானது பல லட்சம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
அகவிலைப்படி நிறுத்தம்
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரையும், ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலும், ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரையிலும் என்று மூன்று தவணை அகவிலைப்படியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டிஏ விகிதம்
இதற்கிடையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த டிஏ வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படலாம் என மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதனால் டிஏ 25% ஆக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பொதுவாக இந்த டிஏ ஒவ்வொரு தவணைக்கும் 2% அதிகரித்து வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆக நிறுத்தப்பட்ட 3 தவணைகள் மற்றும் ஜூலை 2021ம் சேர்த்து, இறுதியாக வழங்கப்பட்ட 17%ல் இருந்து, 25% அதிகரிக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
பயணப்படி அதிகரிக்காது?
பயணப்படி குறித்து தேசிய கவுன்சில் சமீபத்தியில் ஜே.சி.எம் இன் பணியாளர் தரப்புச் செயலாளர் டி.ஏ.சிவ் கோபால் மிஸ்ரா, மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி டிஏவினை பொறுத்து அதிகரிக்கும். ஆனால் டிஏ 25% அல்லது அதற்கு மேல் இருந்தால் தான் இது சாத்தியமாகும். தற்போது மத்திய அரசு ஊழியர்களின் டிஏ விகிதம் 17% ஆக உள்ளது. ஆக தற்போதைக்கு பயணப்படி உயராது என்றும் கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கு பயன்
ஜூலை 2021 முதல், இந்த மாற்றம் செய்யப்பட்டால் சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். இதே 58 லட்சத்துற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் இது பயன் தரும். அரசு ஜூலை 2021 வரை DA மற்றும் DR இரண்டையும் மையம் முடக்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏவில் மாற்றம் செய்யப்படும் போது, ஓய்வூதியதாரர்களுக்கு டிஆரிலும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications