இந்திய மக்களுக்கும் வாழ்நாளில் சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது முக்கியக் கனவாக இருக்கும் நிலையில், இதை எளிதாக்க வங்கிகள் அதிகளவிலான கடனை அளித்து வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்த வட்டியில் வீடு கட்டுவதற்கான முன்பணத்தை (House Building Advance - HBA) 31 மார்ச் 2023 வரை பெறலாம். HBA க்கு தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஏப்ரல் 1, 2022 வெளியிட்ட அறிக்கையில் HBA மீதான வட்டி விகிதத்தை 7.1% ஆகக் குறைத்துள்ளது என்றும் இத்திட்டத்தின் கீழ் 31 மார்ச் 2023 வரை முன்பணம் பெறலாம் என்றும் அறிவித்துள்ளது.
7வது சம்பள கமிஷன்
7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு HBA வசதி வழங்கப்படுகிறது. HBA விதிகளின்படி, மத்திய அரசின் ஊழியர்கள், புதிய வீடு கட்டுதல், வீடு கட்டுவதற்கான ப்ளாட் வாங்குதல், வீடுகளை விரிவுபடுத்துதல், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவதற்கு வட்டியுடன் கூடிய முன்பணத்தைப் பெறலாம்.
கடன்
House Building Advance தொகையைக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அல்லது அரசு அல்லது ஹட்கோ அல்லது தனியார் வங்கி அமைப்புகளில் இருந்து மத்திய அரசு ஊழியர்கள் வீட்டுக் கட்ட வாங்கிய அட்வான்ஸ் தொகையைத் திருப்பிச் செலுத்தும் பயன்படுத்த முடியும்.
34 மாத அடிப்படை சம்பளம்
வீடு கட்டுவதற்கான முன்பண விதிகள் (HBA) 2017ன் படி, மத்திய அரசு ஊழியர்கள் 34 மாதங்கள் வரையிலான அடிப்படை சம்பளம் அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை HBA ஆகப் பெறலாம். வீடு/ஃப்ளாட்டின் விலை ரூ.25 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், ஊழியர் குறைந்தபட்ச தொகையை மட்டுமே HBA ஆகப் பெறத் தகுதி அடைவார்.
10 லட்சம்
இதேபோல் தற்போதுள்ள வீட்டை விரிவுபடுத்த HBA பணத்தைப் பெறும் வசதியும் உள்ளது. இந்த விதியின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் 34 மாத அடிப்படை சம்பளத்தில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் அல்லது மொத்த விரிவாக்கச் செலவு ரூ.10 லட்சம் வரை பெறலாம்.
கிராமப்புற வீடுகள்
முன்பணத் தொகையானது கிராமப்புறங்களில் நிலத்தை வாங்கும் போதும், வீட்டைக் கட்டும் போதும், வசிக்கும் வீட்டை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு உண்மையான விலையில் 80 சதவீதம் வரையில் மட்டுமே அளிக்கப்பட வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
100% தொகை
ஆனால் சம்பந்தப்பட்ட கிராமப் பகுதி, நகரம் அல்லது நகரத்தின் எல்லைக்குள் வருகிறது என்று துறைத் தலைவர் சான்றளித்தால் இந்த விதிமுறை தளர்த்தப்பட்டு 100% அனுமதிக்கப்படும் என 2017 HBA விதிகளின் கீழ் வருகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் நகர எல்லைக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் கூடச் சொந்த வீட்டை வாங்கும் முயற்சியை மேற்கொள்ள முடியும்.
10 ஆண்டுகள் பணி
எச்பிஏ பெறுவதற்கு மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை 5 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்திருந்தது. மேலும், கணவன், மனைவி அரசு ஊழியர்களாக இருந்தால், இருவரும் தனித்தனியாக HBA தொகை பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும் பரிந்துரைத்திருந்தது.


Click it and Unblock the Notifications