7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மீண்டும் DA உயர்வு.. தமிழ்நாட்டில்..?!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான கிராக்கிப்படி (DA) மற்றும் கிராக்கிப்படி நிவாரணம் (DR) ஆகியவற்றை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி நடைமுறைப்படுத்தி உள்ள நிலையில் பலகோடி ஊழியர்கள் இதன் மூலம் பெரிய அளவிலான நன்மை அடைந்தது மட்டும் ஒவ்வொரு மாதமும் பெறும் சம்பளத்தில் பெரிய உயர்வைப் பெற்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு மீண்டும் அரசு ஊழியர்களுக்கான கிராக்கிப்படி (DA) மற்றும் கிராக்கிப்படி நிவாரணம் (DR) ஆகியவற்றை உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மத்திய அரசு

மத்திய அரசு

மத்திய அரசு கொரோனா தொற்றுக் காலத்தில் அரசு ஊழியர்களுக்கான பல சலுகைகளை நிறுத்தி வைத்திருந்தாலும், அடிப்படை சம்பளம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கொடுப்பனவுகள் அதிகளவில் குறைக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்கள்

இதனால் அரசு வேலையில் இருக்கும் மக்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டனர். இவர்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு சில மாதங்களுக்கு 17 சதவீதத்தில் இருந்த கிராக்கிப்படியை 28 சதவீதமாக உயர்த்திய நிலையில், தற்போது மீண்டும் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

கிராக்கிப்படி உயர்வு

கிராக்கிப்படி உயர்வு

அரசு ஊழியர்கள் இதைக் கொண்டாட்டத்துடன் வரவேற்றுள்ளனர். தற்போது மத்திய அரசு திட்டமிட்டுள்ள படி கிராக்கிப்படி (DA) மற்றும் கிராக்கிப்படி நிவாரணம் (DR) சேர்த்து 3 சதவீதம் கூடுதலாக அதிகரிக்கத் திட்டமிட்டு ஆலோசனை நடத்தி வருகிறது.

31 சதவீதம் கிராக்கிப்படி

31 சதவீதம் கிராக்கிப்படி

இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கிராக்கிப்படி மற்றும் கிராக்கிப்படி நிவாரணம் அளவீடு 31 சதவீதம் வரையில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, இது அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

வீட்டு வாடகை அலவன்ஸ்

வீட்டு வாடகை அலவன்ஸ்

இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை அலவன்ஸ் (HRA) அளவையும் அதிகரிக்க உள்ளது. பொதுவாக வீட்டு வாடகை அலவன்ஸ் (HRA) அளவீடு, கிராக்கிப்படி அளவு 25 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தால் HRA அளவு தானாக அதிகரிக்கும்.

வீட்டு வாடகை கொடுப்பனவு

வீட்டு வாடகை கொடுப்பனவு

தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள கிராக்கிப்படி அளவீடுகள் மூலம் வீட்டு வாடகை அலவன்ஸ் 3 சதவீதம் வரையில் அதிகரிக்க உள்ளது. இந்த மாற்றம் விரைவில் அறிவிக்கப்படும் என்பதால் அரசு ஊழியர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

3 பிரிவுகள்

3 பிரிவுகள்

மேலும் தற்போது வீட்டு வாடகை அலவன்ஸ் அளவீடுகள் நகரங்கள் அடிப்படையில் 27 சதவீதம், 18 சதவீதம், 9 சதவீதம் என 3 பிரிவில் அளிக்கப்படுகிறது. அதாவது மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றும் நகரங்களை மத்திய அரசு X, Y, Z என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கின்றனர்.

5,400 ரூபாய்

5,400 ரூபாய்

இதில் X பிரிவில் இருப்பவருக்கு HRA-வாக 5,400 ரூபாயும், Y மற்றும் Z பிரிவில் இருப்பவர்களுக்கு 3,600 மற்றும் 1,800 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த அளவீடுகள் தான் பெரிய அளவில் அதிகரிக்க உள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கான கிராக்கிப்படி அளவீட்டை அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசின் புதிய உயர்வை நடைமுறை செய்த பின்பு மாநிலத்தின் நிதி நிலையைப் பொருத்து முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பப் பென்ஷன் அளவீடு

குடும்பப் பென்ஷன் அளவீடு

மேலும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் வாழ்க்கையை எளிதாக்க வேண்டும் என்பதற்காகக் குடும்பப் பெஷன் அளவீட்டை 45,000 ரூபாயில் இருந்து 1.25 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தியுள்ளது.

வீட்டுக் கடன் திட்டம்

வீட்டுக் கடன் திட்டம்

இதுமட்டும் அல்லாமல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியதாரர்களின் குடும்பம் ஆகியோருக்கு HBA திட்டத்தின் கீழ் வீட்டுக் கடனை மிகவும் குறைந்த வட்டியில் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி ஊக்கத்தொகையைப் பெற சில முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+