7வது சம்பள கமிஷன்.. செப்டம்பர் முதல் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம்.. முழு கணக்கீடு இதோ..!

செப்டம்பர் முதல் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் வரலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17%ல் இருந்து 28% ஆக அதிகரிக்க ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு ஊழியர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. எனினும் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அரசு இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.

Array

Array

இப்படி பல ஆண்டுகால காத்திருப்புக்கு மத்தியில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் இருந்த முடக்கம் நீக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போது அடிப்படை சம்பளத்தில் 28% அகவிலைப்படி கிடைக்கும். இதில் இன்னொரு நல்ல விஷயம் என்னவெனில் HRA அலவன்ஸூம் 27% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் பேர் பயன்

பல லட்சம் பேர் பயன்

மத்திய அரசின் இந்த அதிகரிப்பினால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன் பெறுவர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ-வினை அரசு நிறுத்தி வைத்தது.
ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரையும், ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலும், ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரையிலும் என மூன்று தவணை அகவிலைப்படியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மாநிலங்களும் அதிகரிப்பு

மாநிலங்களும் அதிகரிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகரித்துள்ள நிலையில், தற்போது சில மாநிலங்களும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளன. தற்போது உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், அசாம், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் அடங்கும்.

ஹெச்.ஆர்.ஏ-வும் அதிகரிப்பு

ஹெச்.ஆர்.ஏ-வும் அதிகரிப்பு

அரசு உத்தரவின் படி ஹெச்.ஆர்.ஏ அலவன்ஸ் என்பது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் திருத்தத்திற்கு பிறகு XYZ நகரங்களில், X பிரிவில் உள்ள நகரங்களுக்கு ஹெச்.ஆர்.ஏ அலவன்ஸ் 27% ஆக இருக்கும். இதே Y வகை நகரங்களுக்கு 18% ஆகவும், Z வகை நகரங்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 9% ஆகவும் இருக்கும்.

இது விரிவான கணக்கீடு

இது விரிவான கணக்கீடு

ஒரு நகரத்தின் மக்கள் தொகையானது 5 லட்சத்தினை தாண்டினால், அது Z பிரிவில் இருந்து, Y வகை மாற்றம் பெரும். இந்த வகை ஊழியர்களுக்கு ஹெச்.ஆர்.ஏ-வும் 9%ல் இருந்து 18% ஆக அதிகரிக்கும்.

இதே X பிரிவில் 50 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை உள்ள நகரம் இருக்கும். இவர்களுக்கு 30% HRA செலுத்தப்படும்.
இதே Y பிரிவில் உள்ள 5 - 50 லட்சம் வரையிலான மக்கள் தொகை உள்ள நகரம் இருக்கும். இவர்களுக்கு 20% HRA செலுத்தப்படும்.
Z பிரிவில் 5 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள நகரங்கள் இருக்கும். இவர்களுக்கு 10% HRA செலுத்தப்படும்.

இந்த மூன்று பிரிவுகளுக்குமே ஹெச்.ஆர்.ஏ அலவன்ஸ் 5,400 ரூபாய், 3,600 ரூபாய் மற்றும் 1,800 ரூபாய் இருக்கும்.

சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம்

சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம்

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம். ஊதிய மேட்ரிக்ஸின் படி பார்த்தால், மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் 18000 ரூபாய் எனில், அவரது சம்பளம் 18000 * 2.57 = 46,260 ரூபாய் ஆகும். இதனுடன் HRA அலவன்ஸையும் சேர்க்கும்போது, இன்னும் சம்பளம் அதிகரிக்கும். மொத்தத்தில் செம்ப்டம்பர் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்

7 வது ஊதியக்குழு ஊதிய மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயாகும். 18,000 ரூபாய் அடிப்படை சம்பளத்தில் 17%-ன் படி, ஊழியர்களுக்கு 2021 ஜூன் வரை 3060 ரூபாய் அகவிலைப்படி கிடைத்துக் கொண்டிருந்தது. ஜூலை 2021 முதல், இப்போது 28% அகவிலைப்படி என்ற நிலையில், செப்டம்பர் முதல் இது 5040 ரூபாயாக அதிகரிக்கும். இது முந்தைய அகவிலைப்படியினை விட மாதம் 1980 ரூபாய் அதிகமாக கிடைக்கும்.

சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?

சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?

குறைந்தபட்ச டிஏ அதிகரிப்பு 5,040 ரூபாயாகவும், குறைந்தபட்ச எச்ஆர்ஏ அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 1,800 ரூபாயாகவும் இருக்கும். அதாவது, செப்டம்பரில் வரும் சம்பளத்தில் 6840 ரூபாய் (5040 + 1800) அதிகரிப்பு இருக்கும். இது ஊழியர்களின் பல வருட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கிடைக்கவுள்ளது.

பயணப்படி அதிகரிக்குமா?

பயணப்படி அதிகரிக்குமா?


மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி நேரடியாக அகவிலைப்படியை சார்ந்துள்ளது. ஆக அகவிலைப்படி அதிகரிக்க அதிகரிக்க பயணப்படியும் தானாக அதிகரிக்கும். ஆகையால் விரைவில் இந்த பயணப்படியும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளத்தில் இன்னும் மாற்றம் இருலாம்.

இதிலும் மாற்றம்

இதிலும் மாற்றம்

சமீபத்தில் பணிக்கான அலவன்ஸ் கணக்கிடுவதற்கான விதிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் நைட் டூட்டி அலவன்ஸைக் (Night Duty Allowance) கணக்கிடுவதற்கு ஒரு சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது, இது (Basic Salary + DA / 200) சூத்திரத்தின் அடிப்படையில் செய்யப்படும். இது அனைத்து அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கும் பொருந்தும்.

வருங்கால வைப்பு நிதி (PF)

வருங்கால வைப்பு நிதி (PF)

7வது சம்பள கமிஷன் விதிகளின் படி, மத்திய அரசின் பிஎஃப் பங்களிப்பு அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எனவே, டிஏ மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களின் இருப்பை அதிகரிக்கும். பி.எஃப் இருப்பு என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கான மிகவும் பொதுவான ஓய்வூதிய நிதி திரட்டும் கருவிகளில் ஒன்றாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+