மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தில் அடுத்த ஆண்டு முதல் பெரியளவிலான மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொரோனா காரணமாக மத்திய அரசு பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை நிறுத்தி வைத்துள்ளது. இந்த அகவிலைப்படியானது வரும் ஜனவரி முதல் திரும்ப கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்ட நிலையில், இது எப்போது வரும் என்ற பலத்த எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
மீண்டும் டிஏ அதிகரிக்கலாம்
இது குறித்து வெளியான தகவல்கள் வரவிருக்கும் ஆண்டு தொடக்கத்தில் டிஏ(DA) விகிதமானது மீண்டும் 3% அதிகரிக்கலாம் என கூறுகின்றது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது 34% ஆக அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரியளவில் நிவாரணத்தினை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலுவை எப்போது?
மேலும் அரசு 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்தும் விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராக்கிப்படி விகிதமானது முன்னதாக 17% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் இந்த விகிதம் 3% அதிகரிக்கப்பட்டது. இதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது விகிதமானது விரைவில் ஊழியர்களுக்கு செலுத்தப்படலாம் என தெரிகிறது. அரசின் இந்த சலுகைகள் கிடைக்கும் பட்சத்தில், அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பெரிய ஏற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் முன்னதாக வரலாம்
கொரோனாவின் காரணமாக டிஏ பல மாதங்களாக முடக்கப்பட்ட நிலையில், இது கிறிஸ்துமஸ்-க்கு முன்னதாக வழங்கப்படலாம் என தெரிகிறது. இது ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
டிஏ விகிதம் தற்போது 31% ஆக உள்ள நிலையில், இது மீண்டும் 3% அதிகரிக்கப்பட்டு 34% ஆக கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள விகிதம் 18,000 ரூபாயாக இருக்கலாம். இதே டிஏ விகிதம் 73,440 ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்படி கணக்கீடு செய்யப்படுகிறது வாருங்கள் பார்க்கலாம்.
கணக்கீடு
ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் - ரூ.18,000
புதிய டிஏ சேர்க்கப்பட்டால் (34%) - மாதம் ரூ.6,120
டிஏ 31% என வைத்துக் கொண்டால் - ரூ.5580
டிஏ விகித அதிகரிப்பு - 6,120 - 5,580= ரூ.540
ஆக வருட சம்பளம் அதிகரிப்பு 540*12 = ரூ.6,480
-அடிப்படை சம்பளம் - ரூ.56,900
புதிய டிஏ (34%) - ரூ.19,346 (மாதம்)
தற்போது வரையிலான டிஏ - ரூ.17,639 (மாதம்)
எவ்வளவு அதிகரிக்கும் - ரூ.19,346 - 17,639= ரூ.1,707 (மாதம்)
வருட சம்பள அதிகரிப்பு 1707*12= ரூ.20,484
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications