மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி விரைவில் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 4% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த பல செய்திகள் வலம் வந்து கொண்டுள்ள நிலையில், எப்போது வரும் என்பது ,மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு அதிகரிப்பு செய்யலாம்?
ஆக எதிர்பார்ப்பினை போல அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால் 42% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னதாக 38% ஆக இருந்தது. முன்னதாக கடந்த செப்டம்பர் 2022ல் டிஏ விகிதமானது அதிகரிக்கப்பட்டது. இந்த விகிதமானது தற்போது மூன்று விதமான அறிவிப்புகளுடன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஏ நிலுவை
இதில் அகவிலைப்படி அதிகரிப்பு, பிட்மென்ட் பாக்டர் அதிகரிப்பு மற்றும் 18 மாத டிஏ நிலுவை என மூன்றும் இந்த அறிவிப்பின் போது அறிவிக்கப்படலாம் என்ற பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. குறிப்பாக மார்ச் 15ம் ஆன இன்று அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி குறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
டிஏ அதிகரிக்க திட்டம்
ஆனால் இன்று இதுவரையில் இது குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் விரைவில் இது குறித்தான அறிவிப்பு என்பது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் 4% அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நிலுவைத் தொகை
மார்ச் 31 முதல், ஊழியர்களுக்கு சம்பள உயர்வும், ஓய்வூதியம் பெறுவோருக்கு அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியமும் கிடைக்கலாம். ஆக ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான பணமும் நிலுவைத் தொகையாக ஊழியர்களின் கணக்கில் வந்து சேரலாம். இவற்றோடு கொரோனா தொற்று காரணமாக 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை முடங்கிய அகவிலைப்படியின் அரியர் தொகையை வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆக விரைவில் இது குறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications