7வது சம்பள கமிஷன்.. செப்டம்பரில் முக்கிய அறிவிப்புகள் வரலாம்..!

ஜூலை முதல் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் வரலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இது குறித்தான எந்த அறிவிப்பினையும் மத்திய அரசு வழங்கவில்லை.

ஆக அகவிலைப்படியில் இருந்து வரும் முடக்கம் இதுவரையில் நீக்கப்படவில்லை. இது மத்திய அரசு ஊழியர்களிடையே பெரும் ஏமாற்றத்தினை தந்துள்ளது எனலாம். எனினும் இது குறித்தான அறிவிப்புகள் செப்டம்பரில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பல லட்சம் பேர் பயன்

பல லட்சம் பேர் பயன்

மத்திய அரசின் இந்த திட்டம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் நிலையில், இது குறித்தான அறிவிப்புகள் மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் இது குறித்த எந்த அறிவிப்பினையும் ஜூன் 26 அன்று வெளியிடப்படவில்லை.

அகவிலைப்படி நிறுத்தம்

அகவிலைப்படி நிறுத்தம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ-வினை அரசு நிறுத்தி வைத்தது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரையும், ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலும், ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரையிலும் என மூன்று தவணை அகவிலைப்படியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு

மிகப்பெரிய எதிர்பார்ப்பு

இதற்கிடையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த டிஏவினை வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படலாம் என மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கடைசியில் அதுவும் நின்று போன்ற நிலையில், இந்த சலுகையானது செப்டம்பர் முதல் மீண்டும் தொடங்கப்படலாம் என்ற கருத்தும் உலாவி வருகின்றது. எனினும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம்

சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம்

அப்படி நிலவி வரும் கருத்துக்களுக்கு ஏற்பட்ட டிஏ மற்றும் டிஆர் விகிதம் சேர்க்கப்பட்டால், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம். ஊதிய மேட்ரிக்ஸின் படி பார்த்தால், மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் 18000 ரூபாய் எனில், அவரது சம்பளம் 18000 * 2.57 = 46,260 ரூபாய் ஆகும். எப்படியிருப்பினும் DA, மற்றும் TA, மருத்துவ இழப்பீடு மற்றும் HRA போன்ற கொடுப்பனவுகளும் சேர்க்கப்படும் போது தான் இறுதி சம்பளம் என்பது தெரிய வரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+