7வது சம்பள கமிஷன்.. ஜூலை முதல் ஊழியர்கள் சம்பளத்தில் இதெல்லாம் மாறலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரவிருக்கும் ஜூலை முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் காத்துக் கொண்டுள்ளது எனலாம். ஏனெனில் 2021 ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் இருந்த முடக்கம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டவுடன், 7 வது ஊதியக் குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மூலம் மாத சம்பளத்தில் பெரிய அளவில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தற்போதுள்ள 17% அகவிலைப்படி இந்த அதிகரிப்புக்குப் பிறகு 28% (17 + 3 + 4 + 4) அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஏ கணக்கீடு 2021 ஜனவரி முதல் ஜூன் வரை எதிர்பார்க்கப்படும் 4% டிஏ மற்றும் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை அறிவிக்கப்பட்ட 4% டிஏ மற்றும் ஜனவரி முதல் ஜூன் 2020 வரையிலான 3% டிஏ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

அகவிலைப்படி  (DA)

அகவிலைப்படி (DA)

மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி (DA), ஹெச்ஆர்ஏ (HRA) பயணப்படி (TA), மருத்துவ கொடுப்பனவு போன்ற பல்வேறு 7வது ஊதிய கமிஷன் சலுகைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய டிஏ. 17% ஆக உள்ளது. ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.21,000 ஆக இருந்தால், அவரது அகவிலைப்படி 3,570 ரூபாயாக இருக்கும். அகவிலைப்படி 28% அதிகரிக்கப்பட்டால் இந்த டிஏ தொகை ரூ.5,880 ஆக மாறும்.

வருங்கால வைப்பு நிதி (PF)

வருங்கால வைப்பு நிதி (PF)

7வது சம்பள கமிஷன் கட்டண விதிகளின் படி, மத்திய அரசின் பிஎஃப் பங்களிப்பு அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எனவே, டிஏ மறுசீரமைப்பிற்குப் பிறகு, ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களின் இருப்பை அதிகரிக்கும். பி.எஃப் இருப்பு என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கான மிகவும் பொதுவான ஓய்வூதிய நிதி திரட்டும் கருவிகளில் ஒன்றாக உள்ளது.

பயணப்படி (TA)
 

பயணப்படி (TA)

ஒரு மத்திய அரசு ஊழியரின் பயணப்படி நேரடியாக அகவிலைப்படியை சார்ந்துள்ளது. ஆக அகவிலைப்படி அதிகரிக்க அதிகரிக்க பயணப்படியும் தானாக அதிகரிக்கும். ஆகையால், அகவிலைப்படி மற்றும் பயணப்படியில் ஒரே சதவீதத்தில் தான் அதிகரிப்பு இருக்கும். ஆக இதுவும் ஜூலை 2021 முதல் இதுவும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர்களுக்கு பயன்

ஊழியர்களுக்கு பயன்

இந்த மாற்றம் செய்யட்டால், ஜூலை 2021 முதல் சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். இதே 58 லட்சத்துற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் இது பயந் தரும். அரசு ஜூலை 2021 வரை DA மற்றும் DR இரண்டையும் மையம் முடக்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏவில் மாற்றம் செய்யப்படும் போது, ஓய்வூதியதாரர்களுக்கு டிஆரிலும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு நேர பணியாளர்களுக்கு அலவன்ஸ்

இரவு நேர பணியாளர்களுக்கு அலவன்ஸ்

மத்திய அரசு இரவு நேர பணிகளுக்காக கொடுப்பனவு விதிகளை மாற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றப்படும் விதிகள் இரவில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு பெரும் பயனளிப்பதாக இருக்கும். அடிப்படை சம்பளம் 43,600 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு இரவு பணிக்கான கொடுப்பனவு தொடர்பான விதிகள் மாற்றப்படவுள்ளது.

இதிலும் மாற்றம்

இதிலும் மாற்றம்

மேலும் இரவு பணிக்கான அலவன்ஸ் கணக்கிடுவதற்கான விதிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய முறை உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. நைட் டூட்டி அலவன்ஸைக் (Night Duty Allowance) கணக்கிடுவதற்கு ஒரு சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது, இது (Basic Salary + DA / 200) சூத்திரத்தின் அடிப்படையில் செய்யப்படும். இது அனைத்து அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கும் பொருந்தும்.

சில அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை

சில அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை

இந்த 7வது சம்பள லடாக் யூனியன் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ள AIS அதிகாரிகளுக்கு SPECIAL ALLOWANCE அதிகரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது உச்சவரம்புக்கும், அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கும் உட்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்பெஷல் அலவன்ஸ் என்பது, தற்போது லடாக்கில் பணியில் உள்ள அகிய இந்திய சேவை அதிகாரிகளுக்கு, அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 20 சதவீதம் கூடுதல் சிறப்பு சலுகையும், 10 சதவீதம் சிறப்பு பணி கொடுப்பனவும் வழங்கப்படலாம் என தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7th pay commission: DA, DR, TA, night duty allowance and salary may change from july

7th pay commission updates.. 7th pay commission: DA, DR, TA, night duty allowance and salary may change from july
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X