இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்பு என்பது அளவிட முடியாத அளவு அதிகரித்து வருகின்றது.
இப்படியொரு நெருக்கடியான நிலையிலும் ஜூலை முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு, பெரும் நிவாரணம் வரலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
ஏனெனில் 2021 ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் இருந்த முடக்கம் நீக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டுமோ?
கடந்த மார்ச் 2021ல் மத்திய அரசு ஜூலை மாதம் முதல் இந்த அகவிலைப்படி தொடரப்படும் என அரசு அறிவித்தது. எனினும் பரவி வரும் கொரோனா காரணமாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டம் ஒத்தி வைப்பு
ஏனெனில் சமீபத்தில் ஜே.சி.எம் தேசிய கவுன்சில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் நிதித்துறை அமைச்சக அதிகாரிகள், என பலரும் கலந்துகொள்ளவிருந்த இது குறித்தான கூட்டத்தினை ஒத்தி வைக்கபட்டது. இந்த கூட்டத்தில் இறுதி முடிவுகள் எட்டப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளி வைக்கப்படுள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளது.
மீண்டும் கூட்டம் எப்போது?
இந்த கூட்டம் 7வது சம்பள கமிஷன் பிரச்சனை குறித்து ஒரு இறுதி முடிவு எட்டப்படலாம் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் மே கடைசி வாரத்தில் இந்த கூட்டம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்னும் தாமதமாகலாம் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது இரண்டாம் கட்ட பரவல் என்பது பரவி வரும் நிலையில், மூன்றாம் கட்ட பரவலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய நிவாரணம்
மத்திய அரசின் 7வது சம்பள கமிஷன் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. ஆக இது குறித்தான அறிவிப்புகள் மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. ஜூன் வரையில் டிஏ விகிதம் முடக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த அறிவிப்பானது கொரோனாவினால் இன்னும் தாமதமாகலாமோ என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
DA நிறுத்தம்
இந்தியாவில் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ-வினை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரையும், ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலும், ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரையிலும் என்று மூன்று தவணை அகவிலைப்படியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு அதிகரிக்கலாம்?
மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ ஜூலை 1 முதல் வழங்கப்படலாம் என மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இது 25% வரை அதிகரிக்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக இந்த டிஏ ஒவ்வொரு தவணைக்கும் 2% அதிகரித்து வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆக நிறுத்தப்பட்ட 3 தவணைகள் மற்றும் ஜூலை 2021ம் சேர்த்து, இறுதியாக வழங்கப்பட்ட 17%ல் இருந்து, 25% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணப்படி அதிகரிக்காது?
ஜே.சி.எம் இன் பணியாளர் தரப்புச் செயலாளர் டி.ஏ.சிவ் கோபால் மிஸ்ரா சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி டிஏவினை பொறுத்து அதிகரிக்கும். ஆனால் டிஏ 25% அல்லது அதற்கு மேல் இருந்தால் தான் இது சாத்தியமாகும். தற்போது மத்திய அரசு ஊழியர்களின் டிஏ விகிதம் 17% ஆக உள்ளது. ஆக தற்போதைக்கு பயணப்படி உயராது என்றும் கூறியிருந்தார். ஆக DA அதிகரித்தாலும், தற்போதைக்கு TA விகிதம் அதிகரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications