கொரோனா பாதிப்பு ஏற்பட்டுக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான கிராக்கிப்படி குறைக்கப்பட்ட நிலையில், இந்த இழப்பீட்டை சரி செய்யும் வகையில் ஜனவரி முதல் ஜூன் 2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் 25 சதவீதம் கிராக்கிப்படியை மத்திய அரசு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியாகியிருக்கும் கணிப்பின் படி அறிவிப்பு வெளியானால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயரும்.
மத்திய அரசு ஊழியர்கள்
இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அறிவிப்பைத் தொடர்ந்து 7வது சம்பள கமிஷன் படி கிராக்கிப்படி (Dearness Allowance) அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது இந்த முக்கியமான கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து central government servants (CGS) பிரிவு ஊழியர்களுக்கான கிராக்கிப்படி ஜூன் 2020 முதல் முடக்கப்பட்டு உள்ள நிலையில், கூடிய விரைவில் இப்பிரிவு ஊழியர்களுக்கான முடிவையும் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணப்படி உயரும்
மேலும் மத்திய அரசின் கிராக்கிப்படி, அவர்களின் பயணப்படி (Travel Allowance) மற்றும் நிலுவையில் இருக்கும் தொகைக்கும் தொடர்புடையதாக இருக்கும் காரணத்தால் மத்திய அரசின் அறிவிப்புக்காகப் பல லட்சம் ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
25 சதவீதம் கிராக்கிப்படி
இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அறிவிப்பின் படி ஜனவரி- ஜூன் 2021 வரையிலான காலகட்டத்திற்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 4 சதவீத கிராக்கிபடி அறிவிக்கும் என்றும், இதன் மூலம் 17+4+4 என மொத்தம் 25 சதவீதம் கிராக்கிபடி அளவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளத்தில் பெரும் உயர்வு
7வது சம்பள கமிஷன் படி கிராக்கிப்படி உயரும் போது பயணப்படி-யும் நேரடியாக உயரும். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
58 லட்சம் ஊழியர்கள்
நடப்பு ஆண்டுக்கும், நிலுவையில் இருக்கும் காலகட்டத்திற்கும் ஓரே நேரத்தில் கிராக்கிபடி மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இது மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் ஆகக் கருதுகின்றனர். மேலும் 7வது சம்பள கமிஷன் படி கிராக்கிப்படி உயர்த்தப்பட்டால் சுமார் 58 லட்சம் ஊழியர்கள் நன்மை அடைவார்கள்
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications