7வது சம்பள கமிஷன்.. சமூக வலைதளங்களில் நிலவி வரும் கருத்துகள் உண்மையல்ல.. நிதியமைச்சகம் விளக்கம்..!

ஜூலை முதல் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அப்படி ஏதும் நடக்கவில்லை. ஏனெனில் இது குறித்து கடந்த ஜூன் 26 அன்று நடந்த கூட்டத்தில் எந்த அறிவிப்பினையும் மத்திய அரசு வழங்கவில்லை. வெளியிடப்படவும் இல்லை.

ஆனால் சமூக வலைதளங்களில் பரவலாக அகவிலைப்படியில் இருந்து வரும் முடக்கம் நீக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம் என உலாவி வருகின்றது. இதற்கிடையில் இது பல தரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.

இது உண்மையல்ல

இது உண்மையல்ல

இது மத்திய அரசு ஊழியர்களிடையே பெரும் ஏமாற்றத்தினை தந்துள்ளது எனலாம். எனினும் இது குறித்தான அறிவிப்புகள் செப்டம்பரில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் நிதியமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜூலை 2021 முதல் டிஏவில் இருந்த முடக்கம் நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் அறிப்பானது போலியானது. அரசு அப்படி எந்த அறிவிப்பினையும் கொடுக்கவில்லை என விளக்கமளித்துள்ளது.

50 லட்சம் ஊழியர்கள் எதிர்பார்ப்பு

50 லட்சம் ஊழியர்கள் எதிர்பார்ப்பு

மத்திய அரசின் இந்த அறிவிப்பினால், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் இது ஏமாற்றம் அளிக்கும் விதமாகவே உள்ளது. ஏனெனில் நிச்சயமாக ஜுலையில் இருந்து முடக்கம் நீக்கப்படலாம் என்ற பலத்த எதிர்பார்ப்புகளை கொண்டிருந்த நிலையில், இது மிகுந்த ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது.

அகவிலைப்படி நிறுத்தம்

அகவிலைப்படி நிறுத்தம்

கொரோனா பேரலையின் காரணமாக கடந்த 2020 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ-வினை அரசு நிறுத்தி வைத்தது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரையும், ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலும், ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரையிலும் என மூன்று தவணை அகவிலைப்படியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த முடக்கம் நீக்கப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இது ஆவது உண்மையாக இருக்கணும்

இது ஆவது உண்மையாக இருக்கணும்

இதற்கிடையில் டிஏவில் இருந்து வரும் முடக்கமானது, செப்டம்பர் முதல் மீண்டும் தொடங்கப்படலாம் என்ற கருத்தும் தற்போது உலாவி வருகின்றது. எனினும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுவும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதன் படி, டிஏ மற்றும் டிஆர் விகிதம் சேர்க்கப்பட்டால், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் செப்டம்பரில் இருந்து பெரும் மாற்றம் வரலாம்.

சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம்

சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம்

ஊதிய மேட்ரிக்ஸின் படி பார்த்தால், மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் 18000 ரூபாய் எனில், அவரது சம்பளம் 18000 * 2.57 = 46,260 ரூபாய் ஆகும். எப்படியிருப்பினும் DA, மற்றும் TA, மருத்துவ இழப்பீடு மற்றும் HRA போன்ற கொடுப்பனவுகளும் சேர்க்கப்படும் போது தான் இறுதி சம்பளம் என்ன என்பது தெரிய வரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+