இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகையை சம்பள கமிஷன் அமைத்து அதன் அடிப்படையில் தான் முடிவு செய்கிறார்கள் . தற்போது ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது .
7ஆவது சம்பள கமிஷனின் காலம் வரும் 31ஆம் தேதி உடன் முடிவடைகிறது. 2026 ஜனவரி 1 முதல் 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு தற்போது தான் எட்டாவது சம்பள கமிஷனையே அமைத்திருக்கிறது. இந்த கமிஷன் தன்னுடைய பரிந்துரைகளை வழங்கி அரசு அதனை ஏற்று புதிய சம்பளம் நடைமுறைக்கு வருவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என சொல்லப்படுகிறது .

அப்படி என்றால் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு எதன் அடிப்படையில் சம்பளம் கிடைக்கும் என்ற குழப்பம் இருக்கிறது. புதிய சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் வரை ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்ச்சியாக வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தரப்படுகிறது. இது மட்டும் இன்றி புதிய சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் வரை ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படக் கூடிய அகவிலைப்படி உயர்வும் தொடர்ச்சியாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழாவது சம்பள கமிஷனை பொறுத்தவரை கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பள கட்டமைப்பையே இது பெரிய அளவில் மாற்றியமைத்தது. ஏழாவது சம்பள கமிஷன் 2.57 என்ற ஃபிட்மண்ட் ஃபேக்டரை அடிப்படையாகக் கொண்டுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தையும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையையும் நிர்ணயம் செய்தது.
ஏழாவது சம்பள கமிஷனில் தான் பழைய கிரேட் அடிப்படையிலான சம்பள கட்டமைப்பை மாற்றி மேட்ரிக்ஸ் அடிப்படையிலான சம்பள கட்டமைப்பை கொண்டு வந்தது. ஆறாவது சம்பள கமிஷன் முடியும் போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 7000 ரூபாய் என்றும் கிரேடு பே 1800 ரூபாய் என்று மொத்தம் 8,800 ரூபாய் தான் சம்பளமாக வழங்கப்பட்டது.
7ஆவது சம்பள கமிஷனில் அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது . கிரேடு பே என்பது நீக்கப்பட்டது மேட்ரிக்ஸ் என்ற புதிய நடைமுறை கொண்டு வந்தது . அகவிலைப்படி பூஜ்ஜியம் என்றானது. அதன்பின்னர் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி வழங்கப்பட்டது. இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தோடு மட்டுமில்லாமல் அடிப்படை சம்பளத்தில் 58 சதவீத தொகை அகவிலை படியாக வழங்கி வருகிறது. அப்படி பார்க்கும்போது 18,000 ரூபாய் அடிப்படை சம்பளம் கொண்ட ஒரு நபருக்கு 10,440 அகவிலைப்படியாகவும் வீட்டு வாடகை கொடுப்பவனாகவும் வழங்கப்படுகிறது. வீட்டு வாடகை அலோவென்ஸ் சராசரியாக 5400 ரூபாய் கிடைக்கும்.
அப்படி பார்க்கும்போது குறைந்தபட்ச சம்பளமாக கைக்கு வரக்கூடிய சம்பளத் தொகையாக 34,000 ரூபாய் இருக்கிறது. அப்படி என்றால் அரசு ஊழியர்களின் கைக்கு வரும் சம்பள தொகை 55% உயர்ந்துள்ளது.தற்போது விலை வாசி உயர்வு, குடும்ப அடிப்படை செலவுகள் அதிகரித்திருப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டு அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டுமென ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications