மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களைச் செய்த நிலையிலும், கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிக்கட்டும் வகையில், தற்போது பல்வேறு அறிவிப்புகள் மத்திய அரசு ஊழியர்களுக்குச் சாதகமாக அமைந்து வருகிறது.
50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், மத்திய அரசு பணியில் இருந்த 65 லட்ச ஓய்வூதியதாரர்களும் கிராக்கிப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றுக்கான அறிவிப்புகளை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டு இருக்கும் நிலையில், கூடிய விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நைட் டியூட்டி-க்கான கூடுதல் சம்பளம் அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
7வது சம்பள கமிஷன்
7வது சம்பள கமிஷன் அறிக்கையின் படி கடந்த நிதியாண்டின் முதல் பாதியில் பர்சனல் மற்றும் பயிற்சி துறை நைட் டியூட்டி அதாவது இரவு நேர பணிக்காகக் கொடுப்பனவு அளிக்கும் வரைமுறையை வெளியிட்டது. ஆனால் கொரோனா தொற்றுக் காரணமாக DA, DR மற்றும் நைட் டியூட்டி-க்கான கொடுப்பனவும் என அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஜூலை மாதம்
இந்நிலையில் வருகிற ஜூலை மாதம் கிராக்கிப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றுக்கான அறிவிப்புகளும், நைட் டியூட்டி-க்கான கொடுப்பனவு குறித்து முழுமையான விளக்கத்தையும் மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய முறை கணக்கீடு
தற்போது நைட் டியூட்டி-க்கான கொடுப்பனவு சிறப்புக் கிரேட் பே அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதை முற்றிலும் மாற்றிவிட்டுத் தனிப்பட்ட கொடுப்பனவாக அளிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இப்புதிய முறையின் படி நைட் டியூட்டி-க்கான கொடுப்பனவு ஊழியர்களுக்குக் கூடுதல் தொகையாகும், டேக் ஹோம் சம்பளம் அதிகமாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
கணக்கீட்டு முறை
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கணக்கீடு முறையின் கீழ் நைட் டியூட்டி-க்கான கொடுப்பனவும் 200 (அடிப்படை சம்பளம் + கிராக்கிபடி / 200) என்ற பார்மூலா கீழ் கணக்கிட்டு வழங்க முடிவு செய்துள்ளது. ஆனால் உறுதியான அறிவிப்புகள் ஜூலை மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications