மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை, 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைக் கொடுப்பனவு (HRA) விதிகளைப் புதுப்பித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் எந்தெந்த சந்தர்ப்பங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA உரிமை இல்லை என்பதற்கான விளக்கத்தையும் வெளியிட்டு உள்ளது.
HRA விதிகளின்படி, அரசு ஊழியர் தான் பணி செய்யும் பகுதியில் வசிக்கிறாரா அல்லது வேறு இடத்தில் வசிக்கிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல், மத்திய அரசு ஊழியரின் பணியிடத்தை அடிப்படையாக வைத்து வீட்டு வாடகை கொடுப்பனவு அளிக்கப்படுகிறது.
வீட்டு வாடகை கொடுப்பனவு
வீட்டு வாடகை கொடுப்பனவு என்பது வாடகை வீடுகளில் வசிக்கும் மாத சம்பளம் பெறும் நபர்களின் தங்குமிடம் செலவுகளை ஈடு செய்ய அரசு மற்றும் நிறுவனங்கள் அளிப்பது. HRA மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது - X, Y மற்றும் Z.
X பிரிவு
X என்பது 50 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கானது. 7வது மத்திய ஊதியக் குழு (CPC) பரிந்துரைத்தபடி, X பிரிவுக்கு HRA 24 சதவீதம் வழங்கப்படுகிறது.
Y பிரிவு
Y என்பது 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை மக்கள்தொகை கொண்ட பகுதிகளுக்கானது. Y பிரிவுக்கு HRA அளவு 16 சதவீதமாக வழங்கப்படுகிறது.
Z பிரிவு
மக்கள் தொகை 5 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் இடத்திற்கு Z எனத் தரம் பிரிக்கப்படுகிறது. இப்பிரிவுக்கு 8 சதவீதம் HRA வழங்கப்படுகிறது.
மத்திய செலவினத் துறை
மத்திய செலவினத் துறையின் அறிக்கைப் படி HRA விகிதங்கள் X, Y & Z வகுப்பு நகரங்களுக்குத் தற்போது 27 சதவீதம், 18 சதவீதம், 9 சதவீதம் என மாற்றப்பட்டு உள்ளது. இது அகவிலைப்படி உயர்த்தப்படும் போதும் உயர உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
விளக்கம்
ஒரு மத்திய அரசு ஊழியர் எப்போதெல்லாம் HRA தொகை பெறத் தகுதி அடையமாட்டார் என்பதற்கான விளக்கத்தை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை தெரிவித்துள்ளது. உதாரணமாக ஒரு ஊழியர் மற்றொரு அரசாங்க ஊழியருக்கு ஒதுக்கப்பட்ட அரசு தங்குமிடத்தைப் பகிர்ந்து கொண்டால் HRA கிடைக்காது.
வீடு ஒதுக்கீடு
ஒரு மத்திய ஊழியர் தனது பெற்றோர் / மகன் / மகளுக்கு மத்திய அரசு, மாநில அரசு, தன்னாட்சி பொது நிறுவனம் அல்லது அரசு கட்டுப்பாட்டில் வரும் நகராட்சி, துறைமுக அறக்கட்டளை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் போன்ற அமைப்பால் ஒதுக்கப்பட்ட விடுதியில் வசிக்கிறார் என்றால் HRA கிடைக்காது.
கணவன் அல்லது மனைவி
மத்திய அரசு, மாநில அரசு, தன்னாட்சிப் பொது நிறுவனம், நகராட்சி, துறைமுக அறக்கட்டளை போன்ற அரசு அமைப்புகளால் கணவன் அல்லது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட தங்கும் இடத்தில் ஒரு மத்திய அரசு ஊழியர் தங்கியிருந்தால் HRA கிடைக்காது.
18 மாத அகவிலைப்படி நிலுவை
இதற்கிடையில், 7வது ஊதியக் குழுவின் கீழ் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகைக்காகக் காத்திருக்கின்றனர். நிதி அமைச்சகம் சமீபத்தில் ஒரு அறிக்கையில் COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் அரசு நிதிநிலை மீதான அழுத்தத்தைக் குறைக்க டிஏ அளிப்பதை நிறுத்தப்பட்டது விளக்கம் கொடுக்கப்பட்டது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications