மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% மார்ச் மாதத்தில் அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதுமட்டும் அல்ல அவர்களின் ஊதியம் 90,000 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் பல நன்மைகள் காத்துக் கொண்டுள்ளன. குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
வாரத்தில் 2 நாள் கட்டாயம்.. ஐடி ஊழியர்களுக்கு வந்தது புதிய உத்தரவு..! #WFH

ரூ.90,000 வரை அதிகரிக்கலாம்
இது 3% அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவால் பல லட்சம் ஊழியர்கள் பலனடையலாம். மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% அதிகமாக உள்ள அகவிலைப்படி, 3% அதிகரிக்கப்பட்டு 34% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் துறை சார்ந்து 90,000 ரூபாய் வரையில் சம்பளத்தில் உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஏ அதிகரிக்கும்
ஜனவரி 2022 மாத தவணைக்கான அகவிலைப்படி 3% அதிகரித்தால், டிஏ விகிதம் 34% ஆக அதிகரிக்கும். உதாரணத்திற்கு ஒருவரின் சம்பளம் 30,000 ரூபாய் எனில், டிஏ விகிதம் 3% அதிகரித்தால் அவரின் மாத சம்பளம் 900 ரூபாய் அதிகரிக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு 10,800 ரூபாய் வரையில் அதிகரிக்கும்.

அதிகபட்ச அதிகரிப்பு
இதே அதிகபட்சம் 2.5 லட்சம் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஆண்டுக்கு, 90,000 ரூபாய் வரை உயர்வு இருக்கலாம். இதே அமைச்சரவை செயலாளர் மட்டத்தில் 7,500 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம். மொத்தத்தில் இந்த மாதத்தில் மிகப்பெரிய அளவில் சம்பள அதிகரிப்பு இருக்கலாம்.

பல ஊக்கத்தொகைகள்
ஒவ்வொரு ஆண்டிலும் ஊழியர்களின் சம்பளம் ஊக்கத் தொகை வடிவில் தொடர்ந்து அதிகரித்து தான் வருகின்றது. இந்த ஊக்கத் தொகையும் பல்வேறு வகையாக வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வீட்டு வாடகை அலவன்ஸ், பயணப்படி, கல்வி ஊக்கத் தொகை, மருத்துவ அலவன்ஸ் என பலவும் வழங்கப்படுகின்றன. இது தவிர பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் என பலவற்றையும் ஊழியர்கள் பெற்று பலனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இம்மாதம் மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.