7வது சம்பள கமிஷன்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. இனி பிஎஃப்பும் அதிகரிக்கலாம்..!

மத்திய அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இது ஊழியர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த DA உயர்வு தான்.

தற்போது 17% ஆக வழங்கப்பட்டுக் கொண்டுள்ள டிஏ விகிதம், 28% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பு

பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பு

இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாகவும் இருக்கலாம். ஏனெனில் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய நிவாரணம்

மிகப்பெரிய நிவாரணம்

மத்திய அரசின் இந்த திட்டம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் நிலையில், இது குறித்தான அறிவிப்புகள் மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. ஜூன் வரையில் டிஏ விகிதம் முடக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த அறிவிப்பானது பல லட்சம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

அகவிலைப்படி நிறுத்தம்

அகவிலைப்படி நிறுத்தம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ-வினை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரையும், ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலும், ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரையிலும் என்று மூன்று தவணை அகவிலைப்படியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பல லட்சம் பேர் பயன்

பல லட்சம் பேர் பயன்

இதற்கிடையில் தான் சமீபத்தில் மத்திய அரசு பச்சை கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த டிஏவினை வரும் ஜூலை 1 முதல் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 50 லட்சம் பணியாளர்களும், 61 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஏ விகிதம்

டிஏ விகிதம்

மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் டிஏ விகிதம் 17%ல் இருந்து, 28% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சம்பள விகிதம் பெரியளவில் மாறுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக இந்த டிஏ ஒவ்வொரு தவணைக்கும் 2% அதிகரித்து வழங்கப்படுவது வழக்கமான ஒன்று.

டிஏ விகிதம் அதிகரிப்பு

டிஏ விகிதம் அதிகரிப்பு

ஆனால் 2020ம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4% அதிகரித்தது. இரண்டாம் பாதியில் ஜூன் 2020ல் 3% ஆகவும், இப்போது ஜனவரி 2021ல் இருந்து அகவிலைப்படி மீண்டும் 4% ஆகவும் அதிகரித்துள்ளது. ஆக மொத்தத்தில் இது 28% ஆகவும் அதிகரித்துள்ளது. எனினும் இந்த மூன்று தவணைகளும் இன்னும் செலுத்தப்படவில்லை.

மொத்த அகவிலைப்படி

மொத்த அகவிலைப்படி

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள மேட்ரிக்ஸ் படி, குறைந்தபட்ச சம்பளம் 18,000 ரூபாயாகும். இதில் 15% அகவிலைப்படி சேர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி சேர்க்கப்பட்டால், மாதத்திற்கு 2,700 ரூபாய் நேரடியாக சம்பளத்தில் சேர்க்கப்படும். இப்படி கணக்கிடும்போது வருடத்திற்கு, மொத்த அகவிலைப்படி 32,400 ரூபாயாகும்.

எவ்வளவு அதிகரிக்கலாம்?

எவ்வளவு அதிகரிக்கலாம்?

ஊதிய மேட்ரிக்ஸின் படி பார்த்தால், மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் 18000 ரூபாய் எனில், அவரது சம்பளம் 18000 * 2.57 = 46,260 ரூபாய் ஆகும். எப்படியிருப்பினும் DA, மற்றும் TA, மருத்துவ இழப்பீடு மற்றும் HRA போன்ற கொடுப்பனவுகளும் சேர்க்கப்படும் போது தான் இறுதி சம்பளம் தெரியவரும்.

வருங்கால வைப்பு நிதி (PF)

வருங்கால வைப்பு நிதி (PF)

ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் பட்சத்தில், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியும் அதிகரிக்கும். இதன் மூலம் ஊழியர்களின் சேமிப்பும் பெருகும். இதே போல ஓய்வூதியதாரர்களுக்கும் பென்ஷன் தொகையானது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+