7வது சம்பள கமிஷன்.. ஜூலை 1 முதல் சம்பளத்தில் பெரும் மாற்றமா.. இன்று முக்கிய முடிவுகள் வரலாம்..!

இன்னும் ஜூன் மாதம் முடிய ஆறு நாட்களே உள்ள நிலையில், ஜூலை முதல் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில் நாளை ஜேசிஎம் தேசிய கவுன்சில் கூட்டம் ஜூன் 26ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் கடந்த மாதம் நடக்கவிருந்த இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெரும் நிவாரணம்

பெரும் நிவாரணம்

இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2021 ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் இருந்து வரும் முடக்கம் நீக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 லட்சம் பேர் பயன்

50 லட்சம் பேர் பயன்

மத்திய அரசின் இந்த திட்டம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் நிலையில், இது குறித்தான அறிவிப்புகள் மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. ஜூன் வரையில் டிஏ விகிதம் முடக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த அறிவிப்பானது, பல லட்சம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வரலாம்.

அகவிலைப்படி நிறுத்தம்

அகவிலைப்படி நிறுத்தம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ-வினை அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரையும், ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலும், ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரையிலும் என மூன்று தவணை அகவிலைப்படியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு

மிகப்பெரிய எதிர்பார்ப்பு

இதற்கிடையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த டிஏவினை வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படலாம் என மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதனால் டிஏ 25% ஆக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பொதுவாக இந்த டிஏ ஒவ்வொரு தவணைக்கும் 2% அதிகரித்து வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆக நிறுத்தப்பட்ட 3 தவணைகள் மற்றும் ஜூலை 2021ம் சேர்த்து, இறுதியாக வழங்கப்பட்ட 17%ல் இருந்து, 28% அதிகரிக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.

முக்கிய எதிர்பார்ப்பு

முக்கிய எதிர்பார்ப்பு

ஊதிய மேட்ரிக்ஸின் படி பார்த்தால், மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் 18000 ரூபாய் எனில், அவரது சம்பளம் 18000 * 2.57 = 46,260 ரூபாய் ஆகும். எப்படியிருப்பினும் DA, மற்றும் TA, மருத்துவ இழப்பீடு மற்றும் HRA போன்ற கொடுப்பனவுகளும் சேர்க்கப்படும் போது தான் இறுதி சம்பளம் தெரியவரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+