நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது மூலமாக வருங்கால வைப்பு நிதி அதிகமாகவும், சம்பளம் குறைவாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் அமல்படுத்துவது மூலமாக ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில் புதிய தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
என்னென்ன மாற்றம்
அதில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட New Wage Code Bill மசோதா மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராச்சுட்டி, Dearness Allowance, Travel Allowance மற்றும் House Rent Allowance அனைத்தும் மாற்றப்படும். புதிய தொழிலாளர் சட்டத்தின் மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராச்சுட்டி, Dearness Allowance, பயணப் படி மற்றும் ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் என அனைத்தும் 50%க்கு மேல் இருக்காது.
அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்
இந்த புதிய தொழிலாளர் விதியின் படி அடிப்படை சம்பளத்தின் பங்கு 50% அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சம்பள பங்கு 50%-க்கு குறைவாக இருந்தால் அவை விரைவில் மாறிவிடும், மேலும் உங்களது அடிப்படை சம்பளத்துடன் சிடிசி (CTC) மேலும் அதிகரிக்கும்.
பிஎஃப் தொகை அதிகரிக்கும்
புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பின் Take Home Salary குறைவாக இருக்கும். ஏனெனில் உங்களது அடிப்படை சம்பளம் 50%-க்கு கீழ் இருக்கும் போது அதில் 12 + 12 = 24 சதவீதம் உங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு மாற்றப்படும். தற்போது அடிப்படை சம்பளத்தில் பிஎஃப் 12% உள்ளது. அடிப்படை சம்பளம் CTC-ல் 50% ஆக மாறும்போது வருங்கால வைப்பு மதிப்பு அதிகரிக்கும்.
1 ஆண்டுக்கு பின்னர் கிராச்சுட்டி
புதிய தொழிலாளர் சட்டங்களில் கிராச்சுட்டியின் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த விதிகளின் படி 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கிராச்சுட்டி வழங்கப்படும். ஆனால் புதிய தொழிலாளர் சட்டத்தின் படி 1 ஆண்டுகள் பணிபுரிந்தாலே கிராச்சுட்டி வழங்கப்படும்.
சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்
7th Pay Commission: 2021 ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியக் குறியீடு மசோதா அமல்படுத்தப்பட்ட பின்னர், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கக்கூடும். இந்த சட்டங்களின் படி, உங்களது Take Home Salary குறையும், ஆனால் பிஎஃப் மற்றும் கிராச்சுட்டியின் பங்களிப்பு அதிகரிக்கும், இதன் காரணமாக நீங்கள் நீண்ட காலத்திற்கு பயன் பெறலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications