இதோ வருது அதோ வருது என பல ஆண்டுகளாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வருமா? எப்போது தான் வரும், சம்பளம் எப்போது தான் அதிகரிக்கும் என பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. ஆனால் இன்று வரையில் இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றது.
நாட்டில் கொரோனாவின் தாக்கம், ஓமிக்ரான் தாக்கம் என மக்களை மாறி மாறி வாட்டி வதைத்து வரும் நிலையில், ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளும் தள்ளி போய்க் கொண்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் அனைத்து சிவில் மற்றும் இராணுவ பிரிவுகளுக்கு சம்பள மாற்றங்களை செய்ய, அரசு ஊழியர்களுக்காக 7வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் வரவிருக்கும் பட்ஜெட்டில் ஆவது ஏதேனும் அறிவிப்பினை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா?
கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தள்ளிப்போய்க் கொண்டிருந்த சலுகைகள், வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. குறிப்பாக மத்திய பட்ஜெட்டில் டிஏ அதிகரிப்பு வரலாம் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
டிஏ அதிகரிப்பா?
ஆக இந்த டிஏ விகிதம் அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களின் சம்பள விகிதத்தில் கணிசமான உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் எவ்வளவு டிஏ அதிகரிப்பு இருக்கலாம் என்பது குறித்தான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும் சில தகவல்கள் 3% இருக்கலாம் என கூறுகின்றன.
சம்பளம்+ பதவி உயர்வு
இவற்றோடு சில மத்திய அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் 2022ல் சம்பள உயர்வு, பதவி உயர்வு என இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை எதிர்பார்த்ததைப் போல டிஏ அதிகரிப்பு இருந்தால் மொத்தம் 34% கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
குறைந்தபட்சம்
அப்படி அதிகரிக்கப்பட்டால் அவர்களின் அடிப்படை சம்பளம் 18000 ரூபாயாக இருக்கும். இதே வருட டிஏ விகிதம் 73,440 ரூபாயாகவும் இருக்கும்.
அடிப்படை சம்பளம் - ரூ.18000
புதிய டிஏ விகிதம் 34% - மாதம் ரூ.6120
இதுவரையிலான டிஏ விகிதம் 31% - மாதம் ரூ.5580
ஒரு வேளை வரும் வாரத்தில் அதிகரிக்கப்பட்டால் - 6120 - 5580 = ரூ.540 கிடைக்கும்,.
ஆக ஒரு வருடத்திற்கு ஊழியரின் சம்பளம் 6480 ரூபாய் அதிகரிக்கும்.
அதிகபட்ச அதிகரிப்பு
இதே அதிகபட்ச அடிப்படை சம்பளமாக - ரூ.56900
பு திய டிஏ விகிதம் 34% - ரூ.19346
இதுவரையிலான டிஏ 31% - ரூ.17639
எவ்வளவு அதிகரிப்பு - ரூ.19346 - 17639= ரூ.1707/மாதம்
மொத்தம் ஒரு வருடத்திற்கு - ரூ.20,484


Click it and Unblock the Notifications