அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. செப்டம்பர் மாத சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் சம்பளத்தில் அகவிலைப்படி (DA) மற்றும் HRA-ம் சேர்த்து வழங்கப்படவுள்ளது.

குறைவான வட்டியில் பர்சனல் லோன்.. எந்த வங்கி பெஸ்ட் ஆப்சன்.. இதோ முழு விவரம்..! குறைவான வட்டியில் பர்சனல் லோன்.. எந்த வங்கி பெஸ்ட் ஆப்சன்.. இதோ முழு விவரம்..!

இதனால் ஊழியர்கள் வரவிருக்கும் தீபாவளிக்கு முன்பு ஒரு டபுள் போனஸ் காத்துக் கொண்டுள்ளது எனலாம்.

செப்டம்பரில் டபுள் போனஸ்

செப்டம்பரில் டபுள் போனஸ்

ஏனெனில் பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் இப்போது அடிப்படை சம்பளத்தில் 28% அகவிலைப்படியை பெற்றுள்ளனர். இதனுடன் ஊழியர்களின் HRAம் அதிகரித்துள்ளது. ஆக ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளம் டபுள் போனஸாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி + வீட்டு வாடகை கொடுப்பனவு

அகவிலைப்படி + வீட்டு வாடகை கொடுப்பனவு

மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவை விதிகளின் படி 27% ஆக உயர்த்தியுள்ளது. ஏற்கனவே ஜூலை 1 முதல், அகவிலைப்படி 28% ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சம்பளம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அரசு தரவுகளின் படி, HRA விகிதம், நகரங்களின் படி மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு எவ்வளவு வீட்டு வாடகை கொடுப்பனவு?

யாருக்கு எவ்வளவு வீட்டு வாடகை கொடுப்பனவு?


மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ள X, Y மற்றும் Z பிரிவுகளில், திருத்தத்திற்குப் பிறகு, X வகை நகரங்களுக்கான HRA அடிப்படை ஊதியத்தில் 27% ஆக இருக்கும், அதேபோல் Y வகை நகரங்களுக்கான HRA அடிப்படை ஊதியத்தில் 18% ஆக இருக்கும், இதே Z வகை நகரங்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 9% இருக்கும்.

குறைந்தபட்ச HRA

குறைந்தபட்ச HRA

ஒரு நகரத்தின் மக்கள் தொகை 5 லட்சத்தை தாண்டினால் அது Z பிரிவில் இருந்து Y வகையாக மேம்படுத்தப்படும். அதாவது, 9%க்கு பதிலாக, 18% HRA கிடைக்கும். 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் X பிரிவில் அடங்கும். மூன்று பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச வீட்டு வாடகை கொடுப்பனவு 5400, 3600 மற்றும் 1800 ரூபாயாகும்.

எவ்வளவு அதிகரிக்கும்

எவ்வளவு அதிகரிக்கும்

7 வது சம்பள கமிஷனின் படி, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயாகும். இதனுடன் ஜூலை 2021 முதல், 28% அகவிலைப்படி ஒவ்வொரு மாதமும் 5040 ரூபாய் பெறத் தொடங்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாக குறைந்தபட்ச அகவிலைப்படி உயர்வு 5040 ரூபாயாகவும், குறைந்தபட்ச HRA அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 1800 ரூபாயாகவும் இருக்கும். அதாவது செப்டம்பரில் வரும் சம்பளம் 6840 (5040 + 1800) ரூபாய் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த அதிகரிப்பானது கொரோனா காரணமாக நீண்டகால காத்திருப்புக்கு பின்னர் ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது. அதுவும் தீபாவளிக்கு முன்னதாக கிடைத்துள்ளது தீபாவளிக்கு டபுள் போனஸ் எனலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7th pay commission: salary of central govt employees to increase in Sep 2021: check the DA, HRA calculation

7th pay commission latest updates.. Salary of central govt employees to increase in Sep 2021: check the DA, HRA calculation
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X