மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மட்டும் அல்லாது பல்வேறு சலுகைகளையும் அரசு வழங்கி வருகின்றது. சம்பளம் மட்டும் அல்லாது ஊக்கத்தொகை வடிவிலும் ஊழியர்கள் பெரும் தொகையினை பெறுகின்றனர் எனலாம்.
குறிப்பாக ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக உயர்கல்விக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகின்றது.
ஊழியர்கள் பணியில் இருக்கும்போது உயர்கல்வி படித்தால், அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஊக்கத் தொகை
மத்திய அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஊழியர்கள் பணிபுரியும்போது உயர்கல்வி படித்தால், அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது உயர் பட்டப்படிப்பு முடித்த ஊழியர்களுக்கு, அரசு ஊக்கத் தொகையை 5 மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
ரூ.30,000 ஆக அதிகரிப்பு
இந்த ஊக்கத் தொகையானது Phd போன்ற உயர்கல்விகளுக்கு பொருந்தும். இந்த ஊக்கத் தொகை தான் 10,000 ரூபாயில் இருந்து 30,0000 ரூபாயாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு 20 ஆண்டுகால விதிகளை பணியாளர் அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.
பழைய விதிமுறைகள்
பழைய விதிமுறைகளின் படி, ஊழியர்களுக்கு இந்த ஊக்கத் தொகை 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் தான் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திருத்தத்திற்கு பிறகு இனி ஊழியர்கள் அதிக ஊக்கத் தொகையினை பெறலாம். இது கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்த ஊக்கத்தொகை குறைந்தபட்ச 2000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
3 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவான டிப்ளமோ படிப்பினை முடித்தால் - ரூ.10,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். 3 ஆண்டுகளுக்கு மேலான பட்டம் அல்லது டிப்ளமோ படிப்புகளுக்கு - ரூ.15,000 ரூபாய் ஊக்கத்தொகையாக கிடைக்கும். இதே 1 வருடம் அல்லது குறைந்த முதுகலை பட்டப்படிப்புகளுக்கு அல்லது டிப்ளமோ படிப்புகளுக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும். 1 வருடத்திற்கு மேலான முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ படிப்புகளுக்கு 25,000 ரூபாய் ஊக்கத் தொகையாக கிடைக்கும். பி.ஹெச் டி அல்லது அதற்கு இணையான படிப்புகளுக்கு 30,000 ரூபாய் ஊக்கத் தொகையாக கிடைக்கும்.
மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்?
முறையான கல்வித் தகுதிக்கான பட்டங்கள் அல்லது இலக்கிய பாடங்களில் உயர் தகுதிகளைப் பெறுவதற்கு எந்த ஊக்கமும் இல்லை. மேலும் பணியாளர் பெற்ற பட்டமோ அல்லது டிப்ளமோ படிப்பானது ஊழியரின் பதவியுடன் தொடர்புடைய ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் அவர் பெறும் அடுத்த பணியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். மத்திய அரசின் இந்த அறிவிப்பானது 2019ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications