மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் காத்துக் கொண்டுள்ளது எனலாம். ஏனெனில் 2021 ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் இருந்த முடக்கம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டவுடன், 7 வது ஊதியக் குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மூலம் மாத சம்பளத்தில் பெரிய அளவில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தற்போதுள்ள 17% அகவிலைப்படி இந்த அதிகரிப்புக்குப் பிறகு 28% (17 + 3 + 4 + 4) அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஏ கணக்கீடு 2021 ஜனவரி முதல் ஜூன் வரை எதிர்பார்க்கப்படும் 4% டிஏ மற்றும் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை அறிவிக்கப்பட்ட 4% டிஏ மற்றும் ஜனவரி முதல் ஜூன் 2020 வரையிலான 3% டிஏ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
7 வது ஊதியக்குழு அகவிலைப்படி
இது தவிர, மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி (DA), ஹெச்ஆர்ஏ (HRA) பயணப்படி, மருத்துவ கொடுப்பனவு போன்ற பல்வேறு 7வது ஊதிய கமிஷன் சலுகைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய டிஏ. 17% ஆக உள்ளது. ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.21,000 ஆக இருந்தால், அவரது அகவிலைப்படி 3,570 ரூபாயாக இருக்கும். அகவிலைப்படி 28% அதிகரிக்கப்பட்டால் இந்த டிஏ தொகை ரூ.5,880 ஆக மாறும்.
வருங்கால வைப்பு நிதி (PF)
7 வது ஊதிய கமிஷன் கட்டண விதிகளின்படி, மத்திய அரசின் பிஎஃப் பங்களிப்பு அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எனவே, டிஏ மறுசீரமைப்பிற்குப் பிறகு, ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சீராக ஊழியர்களின் பாஸ்புக் இருப்பை அதிகரிக்கும். பி.எஃப் இருப்பு என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கான மிகவும் பொதுவான ஓய்வூதிய நிதி திரட்டும் கருவிகளில் ஒன்றாக உள்ளது. இந்த டிஏ முடக்க நீக்கம், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான் என கூறப்படுகிறது.
7 வது ஊதியக்குழு பயணப்படி
ஒரு மத்திய அரசு ஊழியரின் பயணப்படி நேரடியாக அகவிலைப்படியை சார்ந்துள்ளது. ஆக அகவிலைப்படி அதிகரிக்க அதிகரிக்க பயணப்படியும் தானாக அதிகரிக்கும். ஆகையால், அகவிலைப்படி மற்றும் பயணப்படியில் ஒரே சதவீதத்தில் தான் அதிகரிப்பு இருக்கும். ஆக இதுவும் ஜூலை 2021முதல் இதுவும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்களுக்கு பயன்
ஜீலை 2021 முதல் இந்த முடக்கம் நீக்கப்பட்டால், சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனபெறுவர். இதே 58 லட்சத்துற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் இது பயனளிக்கும். அரசு ஜூலை 2021 வரை DA மற்றும் DR இரண்டையும் மையம் முடக்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏவில் மாற்றம் செய்யப்படும் போது, ஓய்வூதியதாரர்களுக்கு டிஆரிலும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications