பிக்சட் டெபாசிட் முதலீடு என்பது அனைவருக்கும் ஏற்றது என்பதும் ரிஸ்க் இல்லாமல் நமது முதலீட்டின் பாதுகாப்பிற்கு பிக்சட் டெபாசிட் உகந்தது என்பது என்ற கருத்து பலருக்கும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பிக்சட் டெபாசிட் முதலீட்டிற்கு அதிகபட்சமாக 6 முதல் 7 சதவீதம் வட்டி மட்டுமே தருகின்றன.
இந்த நிலையில் கேரள அரசு நிறுவனம் ஒன்று பிக்சட் டெபாசிட் முதலீட்டிற்கு 8.35 சதவீதம் வரை வட்டி தருவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிக்சட் டெபாசிட்
இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் முதலீடு என்பது ஒரு பிரபலமான முதலீட்டு விருப்பமாகும். ஏனெனில் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யப்படும் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நிலையான விகிதத்தில் வருமான கிடைக்க பெறுகிறது. பல தனியார், பொது மற்றும் அரசாங்க நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு நியாயமான வட்டியை பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்குகின்றன.
பிக்சட் டெபாசிட் வகைகள்
பிக்சட் டெபாசிட் முதலீட்டில் பல வகைகள் உள்ளன. வரி சேமிப்பு பிக்சட் டெபாசிட், மூத்த குடிமக்கள் பிக்சட் டெபாசிட், ரெகுலர் சிட்டிசன் பிக்சட் டெபாசிட் ஆகியவை அடங்கும். பொதுவாக பிக்சட் டெபாசிட் முதலீட்டிற்கு அதிகபட்ச 7 சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்படும் நிலையில் கேரள அரசு நிறுவனம் ஒன்று பிக்சட் டெபாசிட் முதலீட்டிற்கு 8.35 சதவீதம் வரை வட்டி தருகிறது.
KTDFC நிறுவனம்
கேரளா டிரான்ஸ்போர்ட் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் பிக்சட் டெபாசிட் முதலீட்டிற்கு அதிகபட்சமாக 8.35 சதவீத வருடாந்திர வட்டி விகிதங்களை வழங்குகிறது. கேரள அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் உங்கள் நிதி ஆலோசகரிடம் ஆலோசித்து முதலீடு செய்யலாம். இனி KTDFC நிறுவனம் சாதாரண குடிமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தரும் வட்டி விகிதம் குறித்து தற்போது பார்ப்போம்.
சாதாரண குடிமக்களுக்கான வட்டி விகிதம்
1 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்கு 7 சதவீத வட்டி விகிதம் மற்றும் 7.23 சதவீத வருடாந்திர வருமானம் பெறலாம்.
2 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்கு 7 சதவீத வட்டி விகிதம் மற்றும் 7.49 சதவீத வருடாந்திர வருமானம் பெறலாம்.
3 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்கு 7 சதவீத வட்டி விகிதம் மற்றும் 7.76 சதவீத வருடாந்திர வருமானம் பெறலாம்.
4 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்கு 6.75 சதவீத வட்டி விகிதம் மற்றும் 7.72 சதவீத வருடாந்திர வருமானம் பெறலாம்.
5 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்கு 6.75 சதவீத வட்டி விகிதம் மற்றும் 8.00 சதவீத வருடாந்திர வருமானம் பெறலாம்.
மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்
1 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்கு 7.25 சதவீத வட்டி விகிதம் மற்றும் 7.50 சதவீத வருடாந்திர வருமானம் பெறலாம்.
2 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்கு 7.25 சதவீத வட்டி விகிதம் மற்றும் 7.78 சதவீத வருடாந்திர வருமானம் பெறலாம்.
3 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்கு 7.25 சதவீத வட்டி விகிதம் மற்றும் 8.07 சதவீத வருடாந்திர வருமானம் பெறலாம்.
4 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்கு 7.00 சதவீத வட்டி விகிதம் மற்றும் 8.05 சதவீத வருடாந்திர வருமானம் பெறலாம்.
5 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்கு 7.00 சதவீத வட்டி விகிதம் மற்றும் 8.35 சதவீத வருடாந்திர வருமானம் பெறலாம்.
ரிசர்வ் வங்கி சான்றிதழ்
KTDFC என்பது கேரள அரசுக்கு முழுமையாகச் சொந்தமான, வங்கி சாரா நிதி நிறுவனம் ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய பதிவுக்கான சட்டப்பூர்வ சான்றிதழை பெற்றுள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications