சுதந்திர தினம்: இந்திய தொழில்துறையில் கலக்கும் பழமையான நிறுவனங்கள்..!

இந்தியாவில் தற்போது தொழில் முனைவோரின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பலரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி வருகின்றனர். இப்படி பலரும் தொழில்களை நோக்கி நகர்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பவை நீண்ட காலமாக தொழில்துறையில் கோலோச்சி இருக்கும் நிறுவனங்களும் அவை வழங்கும் நம்பிக்கைகளும் தான். அப்படி இந்திய தொழில் வரலாற்றில் முக்கிய இடத்தில் இருக்கும் சில நிறுவனங்கள்..

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பில் இருந்து இயங்கும் பல நிறுவனங்கள் இன்றும் பங்குச்சந்தையில் மாஸ் காட்டி வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் இந்திய தொழில்துறையில் அசத்தும் இத்தகைய நிறுவனங்களை பார்ப்போம்.

சுதந்திர தினம்: இந்திய தொழில்துறையில் கலக்கும் பழமையான நிறுவனங்கள்..!


பாம்பே டையிங் கம்பெனி : 1879 ஆம் ஆண்டில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு வாடியா குழுமத்தால் தொடங்கப்பட்டது தான் பாம்பே டையிங் கம்பெனி. தன்னுடைய டையிங் தொழிலில் சரிவை ஏற்பட்டதை அடுத்து 1900களில் இந்த குழுமம் டெக்ஸ்டைல் துறை பக்கம் வணிகத்தை தொடங்கியது. அந்த சமயத்தில் இந்திய வணிகர்கள் சீனாவில் இருந்து துணிகளை இறக்குமதி செய்வதை நிறுத்தி வைத்திருந்தனர். எனவே பாம்பே டையிங் கம்பெனி அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றி கண்டது.

ஷாலிமர் பெயிண்ட்ஸ்: 1902 ஆம் ஆண்டு குர்குவானை தலைமையிடமாக கொண்டு ஜின்டால் குழுமத்தால் தொடங்கப்பட்டது தான் ஷாலிமர் பெயிண்ட்ஸ். தெற்காசியாவின் மிகப் பழமையான பெயிண்ட் நிறுவனமாக இது அறியப்படுகிறது. ஷாலிமர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் மத்திய அரசும் மத்திய ரயில்வே துறையும் முக்கியமானது. நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தகவமைத்து கொண்டிருக்கும் ஷாலிமர் பெயிண்ட்ஸ் நிறுவனம் தற்போதும் இந்திய சந்தையில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிறுவனமாக இருக்கிறது.

தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்: 1863 ஆம் ஆண்டு மும்பையை தலைமையிடமாக கொண்டு வாடியா குழுமத்தால் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். பர்மா தேக்கு மரங்களை விற்பனை செய்து அதன் மூலம் லாபம் கண்டது. பின்னர் துணிமணி , எண்ணெய், காபி மற்றும் தேயிலை தோட்டங்கள் ,ரியல் எஸ்டேட் என பல துறைகளிலும் இந்த நிறுவனம் கால் பதித்து வெற்றிகரமான நிறுவனமாக செயல்பட்டது.

ஓடிஐஎஸ் எலிவேட்டர் கம்பெனி: 1892 ஆம் ஆண்டு மும்பையை தலைமை இடமாக கொண்டு யுனைடெட் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டது தான் இந்த நிறுவனம். உலக அளவில் வெற்றிகரமான எலிவேட்டர் நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது. உலகின் உயரமான கட்டிடமான பூர்ஜ் கலிஃபாவில் இந்த நிறுவனத்தின் எலிவேட்டர் இயங்குகிறது என்பது இதன் மற்றொரு சிறப்பு ஆகும். இன்றளவிலும் இந்த நிறுவனம் பெங்களூருவில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நடத்தி வருகிறது ஓராண்டுக்கு பத்தாயிரம் எலிவேட்டர்களை இது உற்பத்தி செய்கிறது.

அலம்பிக் பார்மா: 1907 ஆம் ஆண்டு வதோதராவை தலைமை இடமாகக் கொண்டு சிராயு அமின் குடும்பத்தினரால் தொடங்கப்பட்டது தான் அலம்பிக் பார்மா நிறுவனம். முதலில் மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்த இந்த நிறுவனம் பின்னாளில் மருந்து தயாரிப்பில் ஈடுபட தொடங்கியது. இருமல் மருந்து ,வைட்டமின் மருந்துகள், டானிக் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது.

கமர்ஹாத்தி கம்பெனி: 1887 ஆம் ஆண்டு கொல்கத்தாவை தலைமை இடமாகக் கொண்டு பிபி அகர்வால் அவர்களால் தொடங்கப்பட்டது தான் கமர்ஹாத்தி கம்பெனி . ஜூட் தொழிலில் ஈடுபட்டு லாபம் பார்க்கக்கூடிய நிறுவனம் என்றால் அது இந்த நிறுவனம் தான். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணியாளர்களின் எண்ணிக்கை குறைத்து இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஆண்டுதோறும் 30 ஆயிரம் டன் ஜூட்களை இது தயாரித்து விற்பனை செய்கிறது.

அம்லக்கி இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி: கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு ஸ்டாக் டிரேடிங் நிறுவனமாக பல்வேறு தனிநபர்களால் இணைந்து தொடங்கப்பட்டது தான் இந்த நிறுவனம். ரியல் எஸ்டேட் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு கடன்களை வழங்குவது மற்றும் ஸ்ட்ராக் டிரேடிங் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டது.

டீஸ்டா வேலி டீ கம்பெனி: பாரத் பஜோரியா என்பவரால் 1841 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது தான் இந்த நிறுவனம். இந்த நிறுவனம் 175 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம் ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதியில் செய்கிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+