கடந்த நவம்பர் மாதத்தில் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 3.1% ஆக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டு நவம்பர் 2020ல் 1.1% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே அக்டோபர் மாதத்தில் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 2021ல் 7.5% ஆக வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டில் 0.5% ஆக சரிவினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய 8 துறைகள்
இதில் இயற்கை எரிவாயு, நிலக்கரி, ஸ்டீல், சிமெண்ட், உரங்கள், சுத்திகரிப்பு பொருட்கள், கச்சா எண்ணெய் விலை, மின்சாரம் உள்ளிட்ட துறைகள் நவம்பர் 2021ல் வளர்ச்சியினை எட்டியுள்ளன. இது கடந்த ஆண்டினை காட்டிலும் வளர்ச்சியினை எட்டியுள்ளன.
பெட்ரோலியம் சுத்திகரிப்பு
இது கடந்த செப்டம்பரில் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி விகிதமானது 4.5 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இதே முக்கிய எட்டு தொழில் துறைகளின் வளர்ச்சி விகிதமானது, 40.27 சதவீதத்தினையும் உள்ளடக்கியது.
மேலும் பெட்ரோலியம் சுத்திகரிப்பு துறையின் வளர்ச்சி விகிதமான முக்கிய எட்டு துறைகளில் டாப் இடத்தில் உள்ளது. இதன் 28.04 சதவீதம் எடை கொண்ட இந்த துறையின் வளர்ச்சி விகிதமானது, 4.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 10.6% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
மின்சாரம் & ஸ்டீல்
இதே மின்சார துறையில் நவம்பர் மாதத்தில் 1.5% வளர்ச்சி கண்டுள்ளது. இதே ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 10.6% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
ஸ்டீல் உற்பத்தி துறையின் வளர்ச்சி விகிதமானது 0.8% ஆக அதிகரித்துள்ளது. இதே ஏப்ரல் - நவம்பர் 2021 - 22 வரையிலான காலகட்டத்தில் 25.3% வளர்ச்சி கண்டுள்ளது.
கச்சா எண்ணெய் வீழ்ச்சி
கச்சா எண்ணெய் உற்பத்தியில் 2.2% நவம்பர் மாதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே நிலக்கரி உற்பத்தி துறையில் வளர்ச்சி விகிதமானது 8.2%மும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் 23.7% வளர்ச்சியும், உரங்கள் உறப்த்தியில் 2.5% வளர்ச்சியும் கண்டுள்ளது.
ௐமிக்ரான் அச்சம்
தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், ௐமிக்ரான் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது படிப்படியாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் மீண்டும் கடந்த ஆண்டினை போல லாக்டவுன் நடவடிக்கைகள் இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதற்கிடையில் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டால், தற்போது தான் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் நிலையில் , தொழில்துறையின் வளர்ச்சி என்னவாகுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications