தொழில்நுட்பங்களின் வருகை மற்றும் மக்களின் தேவை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் குறிப்பிட்ட வேலைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும். அந்த வகையில் தற்போது அதிக டிமாண்ட் இருக்கும் 8 முக்கியமான வேலைகள் குறித்து நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கம்ப்யூட்டர் சிஸ்டம் மேனேஜர்: பல்வேறு நிறுவனங்களும் தற்போது கணினி சார்ந்த தான் இயங்குகின்றன. எனவே ஒரு நிறுவனத்திற்கான கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்வது, அவற்றை பராமரிப்பு செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

சர்வதேச அளவில் அதிக டிமாண்ட் இருக்கக்கூடிய இந்த துறை 2033 ஆம் ஆண்டுக்குள் 17 சதவீதம் வரை வளரும் என சொல்லப்படுகிறது. சர்வதேச அளவில் சராசரியாக இந்த பிரிவில் பணிபுரிபவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 7000 ரூபாய் வரை ஊதியம் கிடைக்கிறதாம்.
மார்க்கெட்டிங் மேனேஜர்: விளம்பரப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவில் தற்போது பல்வேறு நிறுவனங்களுக்கும் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இந்த பிரிவினை பொருத்தவரை 2033 ஆம் ஆண்டுக்குள் 8 சதவீத வளர்ச்சி அடையும் என சொல்லப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 6000 ரூபாய் வரை இந்த பிரிவில் வருமானம் ஈட்ட முடியும்.
மனித வள மேலாளர்: நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை பணிக்கு அமர்த்துவது அவர்களுக்கான பலன்களை வழங்குவது மற்றும் அவர்களை மேலாண்மை செய்யும் பணிகளுக்கு ஆட்கள் பெரிய அளவில் தேவைப்படுகிறார்கள். 2033 ஆம் ஆண்டுக்குள் இந்த பிரிவு 6 சதவீத முறை வளர்ச்சி அடையும் என சொல்லப்படுகிறது. இந்த பிரிவில் இயங்கக்கூடிய நபர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வரையும் சம்பாதிக்கிறார்களாம்.
நிதி மேலாளர்: நிதி ரீதியாக நிறுவனத்தின் வளர்ச்சியை கவனித்துக் கொள்வதற்கு தற்போது பெருமளவில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். பட்ஜெட் போடுவது, எதில் முதலீடு செய்வது என்பன உள்ளிட்டவற்றுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். குறிப்பாக நிதி ரீதியாக திட்டமிட்டு நிறுவனத்தை வளர்ச்சி அடைவதற்கு செய்ய உதவ வேண்டும். 2033 ஆம் ஆண்டுகள் 17 சதவீதம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
நேச்சுரல் சயின்ஸ் மேனேஜர்: பல்வேறு நிறுவனங்களுக்கும் அவர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் ஆய்வு மேற்கொண்டு புதிய பிராஜெக்ட்டுகளை கொண்டு வருவது அவற்றை பின் தொடர்வது, தொழில்நுட்ப ரீதியான வழிகாட்டுதல்களை வழங்குவது ஆகியவற்றுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். இந்த பிரிவில் ஒரு மணி நேரத்திற்கு 6000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறதாம். இந்த துறை 2033 ஆம் ஆண்டுக்குள் 8 சதவீதம் வரை வளரும் என சொல்லப்படுகிறது.
பப்ளிக் ரிலேஷன்ஸ் மேனேஜர்: தங்கள் நிறுவனத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையே பாலமாக விளங்கக்கூடிய பிஆர் மேனேஜர்களுக்கான சேவை சர்வதேச அளவில் அதிகரித்து வருகிறது. 2033 ஆம் ஆண்டுக்குள் இந்த பிரிவு 7% சொல்லப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தொடர்பான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, நிறுவனம் தொடர்பாக அடிக்கடி ஊடகங்களில் செய்தி வெளியே வருவதை மேலாண்மை செய்வது இவர்களின் வேலையாகும்.
மருத்துவ உதவியாளர்கள்: மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்களுக்கு உதவியாளர்கள் அதிகமாக தேவைப்படுகின்றனர். அறுவை சிகிச்சையின் போது உதவுவது நோயாளிகளை பரிசோதனை செய்யும் போது உதவுவது ஆகிய பணிகளுக்காக இவர்கள் பயன்படுத்தப்படுகிறார். 2033க்குள் இந்த துறை 28 சதவீதம் வளர்ச்சி அடையும் என சொல்லப்படுகிறது.
வழக்கறிஞர்கள் : நிறுவனங்களுக்கு தேவையான சட்ட ரீதியான அறிவுரைகளை வழங்குவதற்கும், சட்ட ரீதியான ஆவணங்களை தயாரித்து வழங்குவதற்கும் தேவைப்படுகிறார்கள். இந்த பிரிவு 2033க்குள் 5 சதவீதம் வளர்ச்சி அடையும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications