காலத்திற்கு தகுந்தாற்போல் வேலை வாய்ப்புகளும் மாறிக்கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாகத் தொடங்கியுள்ளன. அதுவும் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஜாப் ரோல்களுக்கெல்லாம் வழங்கப்படும் சம்பளத்தை விட, புதிதாக உருவாகி இருக்கும் ரோல்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? புதிதாக உருவாகி அதிக சம்பளம் வழங்கும் 8 ஜாப் ரோல்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
சிலர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த என்ன கோர்ஸ் படிக்கலாம் என்று திட்டமிட தொடங்கி விடுவீர்கள். இதுபோன்ற நபர்களுக்கு இந்த பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிதாக உருவாகும் ஜாப் ரோல்களுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்வது முக்கியம். உங்களுடைய வேலையில் அவுடேட்டடாக தெரியாமல் இருக்க, புது தொழில்நுட்பத்தை தெரிந்து அப்டேட்டாக இருப்பது அவசியம்.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எத்திக்ஸ் கன்சல்டன்ட்: தற்போது மனிதனைப் போலவே யோசித்து செயல்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் வந்துவிட்டது. ஆனாலும் இதை பயன்படுத்தி பணி புரியும்போது சில தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க AI தொழில்நுட்பம் சரியாக செயல்படுகிறதா? என்று பார்த்து ஆலோசனை சொல்லும் நபர்தான் இந்த AI எத்திக்ஸ் கன்சல்டன்ட். இவர்களுக்கு 6 இலக்க சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
பிளாக்செயின் டெவலப்பர்: பிளாக்செயின் தொழில்நுட்பம் கிரிப்டோகரன்சிக்கு அப்பாற்பட்ட சில தொழில்களில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, நிதி, சுகாதாரம் மற்றும் தளவாடங்கள் போன்றவை இதில் அடங்கும். பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பணிபுரிய திறமையான டெவலப்பர்களுக்கு அதிக தேவை உள்ளது. அனுபவம் வாய்ந்த டெவலப்பர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ. 15 முதல் ரூ. 50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
VR/AR எக்ஸ்பீரியன்ஸ் டிசைனர்: மால்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உண்மையானது போலவே காண்பிக்கும் படங்கள் விளையாட்டுகள் போன்றவற்றை பார்த்திருப்பீர்கள். ஏன் சிலர் விளையாடி இருப்பீர்கள். VR/AR தொழில்நுட்பம் கேமிங்கிற்கு அப்பாற்பட்டு சுகாதாரம், கல்வி என பல துறைகளிலும் விரிவடைந்து வரும் ஒரு விஷயமாக உள்ளது. எனவே அதிவேகமாக டிஜிட்டல் எக்ஸ்பிரியன்ஸை வழங்கும் நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த துறையில் உள்ள டெவலப்பர்கள் பெரும்பாலும் ஒரு ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 30 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெறுகின்றனர்.
கிளைமேட் சேஞ்ச் அனலிஸ்ட்: பூமியின் காலநிலை மாற்றத்தை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் ஆலோசனை வழங்கும் பதவி தான் இது. பூமியின் காலநிலை மாற்றத்தினால் பல பிரச்சினைகளை ஏற்படுகிறது. உதாரணமாக சுனாமியை எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற பிரச்சனைகளை தெரிந்து கொண்டு அதற்கு முன்னதாகவே எச்சரிக்கை வழங்கும் வகையில் செயல்படுவது தான் இந்த ரோல். இவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.
ஈ-ஸ்போர்ட்ஸ் கோச் மற்றும் ஈ-ஸ்போர்ட்ஸ் மேனேஜர்: எப்படி விளையாட்டுகளுக்கு கோச் இருக்கிறார்களோ அதே போல ஆன்லைன் விளையாட்டுகளுக்கான கோச் தான் இவர்கள். இந்த விளையாட்டில் வெற்றி பெற விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் நபர் தான் இந்த ஈ-ஸ்போர்ட்ஸ் கோச்.
சைபர் செக்யூரிட்டி இன்சிடெண்ட் ரெஸ்பான்டன்ட்: ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோக்கள் இணையத்தில் பிரபலமாவதை பார்த்திருப்பீர்கள். இதனால் சில பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படுகிறது. எனவே இதை ஆராயவும் எங்கிருந்து இது போன்ற வீடியோக்கள் பதிவிடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளவும் தகுதியான நிபுணர்களை நிறுவனங்கள் தேடுகின்றன. எனவே சிறப்பான திறன்களை கொண்ட சைபர் செக்யூரிட்டி இன்சிடென்ட் ரெஸ்பான்டன்ட் ரோல்களுக்கு ஆண்டுக்கு 10 முதல் 30 லட்சம் வரை வருமானம் வழங்கி சில நிறுவனங்கள் பணியமர்த்துகின்றன.
இன்ஃப்ளூன்ஸர்கள்: இன்ஸ்டாகிராமில் தற்போது பல இன்ஃப்ளேன்ஸர்கள் வலம் வருவதை பார்த்திருப்பீர்கள். எனவே இது போன்ற இன்ஃப்ளூன்ஸர்களை பயன்படுத்தி தங்கள் நிறுவனத்தின் சேவைகள் மற்றும் பொருட்களை விளம்பரம் செய்யும் ரோல் தான் இது. இவர்களுக்கும் பிற ரோல்களைப் போலவே நல்ல வருமானம் கிடைக்கும்.
டிஜிட்டல் டீடாக்ஸ் தெரபிஸ்ட்: மொபைல் போனின் பயன்பாடு மற்றும் கம்ப்யூட்டரின் பயன்பாடு காரணமாக பலரும் இதற்கு அடிமையான சூழல் தான் நிலவி வருகிறது. எனவே இவர்களை இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து மன அழுத்தத்தை குறைக்கும் வேலைதான் இது. மேலே கூறப்பட்டுள்ள அனைத்து வேலை வாய்ப்புகளும் தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவானவை. எதிர்காலத்தில் இதில் இன்னும் நிறைய புதிய வேலை வாய்ப்புகள் சேர்க்கப்படலாம்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications