2024-ஆம் ஆண்டில் வருமான வரிச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் 2025-ஆம் ஆண்டில் வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் (ITR) செய்யும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு தொடக்கத்தில் பொது தேர்தல் நடந்து முடிந்ததால் அரசாங்கம் வருமானவரிச் சட்டங்களில் சில மாற்றங்களை செய்திருக்கிறது. இந்த மாற்றங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
திருத்தப்பட்ட வருமான வரி சட்டங்கள் என்னென்ன?:
புதிய வருமான வரி ஸ்லாப்: புதிய வருமான வரி ஸ்லாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ரூ. 3,00,001 முதல் ரூ. 7,00,000 வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ரூ.7,00,001 முதல் ரூ.10,00,000 வரையிலான வருமானத்திற்கு 10 % வரியும், ரூ.10,00,001 முதல் ரூ.12,00,000 வரையிலான வருமானத்திற்கு 15 சதவீத வரியும், ரூ.12,00,001 முதல் ரூ.15,00,000 வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதமும், ரூ.15,00,000-க்கு மேல் உள்ள வருமானத்திற்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.

நிலையான விலக்கு வரம்பு: புதிய வரி விதிப்பின் கீழ் நிலையான விலக்கு 50,000 ரூபாயிலிருந்து ரூ.75,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய வரி முறையின் கீழ், சம்பளம் பெறும் நபர்களுக்கு ரூ.50,000 மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.15,000 என்ற வரம்பில் மாற்றம் இல்லாமல் அப்படியே உள்ளது. புதிய வரிமுறையின் கீழ் உள்ள வரிவிலக்கு அதிகரிப்பு வரி செலுத்தக்கூடிய வருமானத்தை குறைக்கிறது.
NPS டிடெக்ஷன்: புதிய வரிவிதிப்பு முறையின் கீழ் தனி நபர்கள் என்பிஎஸ் திட்டத்திற்கு 10 சதவீதத்திலிருந்து 14% வரை கழிவுகளை கோரலாம். ஆனால் 7.5 லட்சத்திற்கும் அதிகமான EPF மற்றும் NPS பங்களிப்புகள் வரிகளுக்கு உட்பட்டவை.
ரியல் எஸ்டேட் விற்பனை மீதான டிடிஎஸ்-இல் மாற்றங்கள்: 50 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும் சொத்துக்களுக்கு தனிப்பட்ட விற்பனையாளரை பொருட்படுத்தாமல் முழு விற்பனை மதிப்பிலும் டிடிஎஸ் பொருந்தும்.
விவாட் சே விஸ்வாஸ் திட்டம் 2.0: விவாட் சே விஸ்வாஸ் திட்டம் 2.0 என்பது அரசு அறிவித்துள்ள ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம், வரி செலுத்துவோர்கள் தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வரி வழக்குகளை எளிதாக தீர்த்து கொள்ள முடியும்.
ஆதார் நம்பர் கட்டாயம்: 2024-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் தனிநபர்கள் தங்கள் ஆதார் எண்ரோல்மென்ட் நம்பரை ஐடிஆர் தாக்கல் செய்யவும் அல்லது பான் கார்டு விண்ணப்பித்து பெறவும் பயன்படுத்த முடியாது. இந்த செயல்முறைகளுக்கு கண்டிப்பாக ஆதார் நம்பர் அவசியமாகும். ஆதார் கார்டு இல்லாதவர்கள் தற்போது இந்த பணிகளை முடிப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம்.
பழைய ஐடிஆர் திருத்தங்களுக்கான காலக்கெடு குறைக்கப்பட்டது: ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை தவிர்த்த வழக்குகளுக்கு பழைய வருமான வரியை தாக்கல் செய்யும் காலக்கேடு 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் கிரெடிட்: சம்பளம் பெறும் நபர்கள் தற்போது தங்கள் சம்பளத்தின் மீதான டிடிஎஸ்-க்கு எதிராக மற்ற வருமான ஆதாரங்களிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் தொகையை சமன் செய்யலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications