இந்தியாவில் வழங்கப்படும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்கள் அரசாங்க ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 1.54 லட்சத்துக்கும் அதிகமான போஸ்ட் ஆபீஸ் அலுவலகங்கள் உள்ளன. இங்கு வழங்கப்படும் திட்டங்கள் பொதுவாக முதலீட்டாளர்களுக்கு சற்று மன நிம்மதியை அளிக்கும் வகையில் இருக்கும். அதற்கு முக்கிய காரணம் அரசாங்கத் திட்டம் என்பதால் தங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை தான்.
ஓய்வூதியத்திற்காக, எதிர்கால தேவைகளுக்காக என எதற்கு வேண்டுமானாலும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அஞ்சல் அலுவலகத் திட்டங்களில் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பதிவில் வரி சலுகைகளுடன் வழங்கப்படும் சேமிப்புத் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.

போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட்: தபால் அலுவலக சேமிப்பு கணக்கு என்பது அடிப்படையான வங்கி கணக்கை போலவே செயல்படக்கூடிய அக்கவுண்ட் ஆகும். இதில் குறைந்தபட்சமாக ரூ.500 முதல் சேமிக்க முடியும். இந்த கணக்கை தனி நபராகவோ அல்லது கூட்டுக் கணக்காக திறக்கலாம். போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இதற்கு குடியுரிமை பெற்ற இந்தியர்கள், 10 வயதுக்கு உட்பட்ட மைனர்கள் என யார் வேண்டுமானாலும் கணக்கை திறக்கலாம். மூத்த குடிமக்களுக்கு 50,000 ரூபாய் வரையிலான வட்டிக்கு வரி இல்லை. செக் புக், ஏடிஎம் கார்டுகள், இ-பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகளையும் கூடுதலாக பெற முடியும். வரிச் சலுகைகளுடன் பாதுகாப்பான மற்றும் எளிதான வகையில் வருமானம் ஈட்ட விரும்புபவர்களுக்கு இந்த கணக்கு சிறந்ததாக இருக்கும்.
5 ஆண்டு போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD): அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்தில் சேமிக்கப்படும் தொகைக்கு கூட்டு வட்டி கிடைக்கிறது. ஒரு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.
12 தவணைகள் வரை செலுத்திய பிறகு முதலீடு செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதம் வரை கடன் பெற முடியும். முதலீட்டு தொகையை முன்கூட்டியே திரும்பப் பெற முடியும். ஆனால் குறைந்த வட்டி விகிதத்துடன் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த முன்கூட்டியே திரும்பப் பெறுதலும் 3 ஆண்டுகளுக்குப் பிறகே கிடைக்கும்.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் (TD): இதனை போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் என்றும் கூறுவார்கள். இந்தத் திட்டத்திற்கு 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என உங்களுக்கு விருப்பப்பட்ட முதலீட்டு காலத்தை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். தற்போது இந்த திட்டத்திற்கு குறைந்தபட்ச முதலீடாக 1000 ரூபாய் முதல் முதலீடு செய்ய முடியும். 5 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் ஆபத்து இல்லாத வருமானத்தை விரும்புவோருக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும்.
போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS): போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தில் ஒரே ஒருமுறை மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் தனிநபராக இருந்தால் ரூ.9 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். கூட்டுக்கணக்காக இருந்தால் ரூ.15 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். தற்போது போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஒரு வேலை முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெற நினைத்தால் அபராதத்துடன் 1 வருடத்திற்கு பிறகு திரும்ப பெற்றுக் கொள்ளலாம். மொத்தமாக 9 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் மாத வருமானமாக தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு 5,325 செலுத்தப்படும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS): இந்தத் திட்டம் குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. SCSS திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 60 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள் அல்லது ஓய்வு பெற்ற நபர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 80 சி பிரிவின் கீழ் நிலையான வருமானம், வரி சலுகைகளை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்களுக்காக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக 30 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF): PPF என்று சொல்லப்படுகிற "பொது வருங்கால வைப்பு நிதி" என்பது பிரபலமான நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 15 ஆண்டுகள். தற்போது PPF திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு குறைந்தபட்சம் முதலீடாக 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். PPF திட்டத்திற்கு தற்போது 80சி பிரிவின் கீழ் பெறப்படும். இதில் பெறப்படும் வட்டி வருமானத்திற்கு வரி இல்லை. PPF கணக்கு தனி நபர்கள் மற்றும் ஓய்வூதியத்திற்காக சேமிக்க விரும்பபவர்களுக்கு ஏற்றது.
கிசான் விகாஸ் பத்ரா (KVP): கிசான் விகாஸ் பத்ரா திட்டம் என்பது தங்கள் முதலீட்டை குறிப்பிட்ட காலத்திற்குள் இரட்டிப்பாக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு சிறந்தது. இந்த திட்டத்திற்கு தற்போது 7.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச முதலீடாக 1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். 115 மாதங்களில் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும். உதாரணமாக இந்த திட்டத்தில் நீங்கள் 1 லட்சம் முதலீடு செய்தால் 2 லட்ச ரூபாயாகும். 2 லட்சம் முதலீடு செய்தால் 4 லட்ச ரூபாயாகும்.
சுகன்ய சம்ரித்தி யோஜனா திட்டம் (SSY): இந்தத் திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக சேமிக்க விரும்பும் பெற்றோர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு அதிகபட்ச வட்டியாக 8.2% வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு 250 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். SSY திட்டத்திற்கு 80-சி பிரிவின் கீழ் வரி சலுகைகள் வழங்கப்படுகிறது. இது பெற்றோருக்கு ஒரு சிறந்த சேமிப்புத் திட்டமாகும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications