இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குழுமம் இந்த ஆண்டு முடியும் போது லாபமாக முடியும் என்று நினைக்கையில் சுமார் 8 நிறுவனங்கள் சரிவில் உள்ளது.
இதனால் ரீடைல் முதலீட்டாளர்கள் டாடா குழும முதலீடுகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதை யோசிக்கத் துவங்கியுள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் டாடா குழுமத்தில் 100க்கும் அதிகமாக நிறுவனங்கள் உலகம் முழுவதிலும் இயங்கி வரும் நிலையில் முக்கியமான நிறுவனங்கள் பல சரிவை எட்டியுள்ளது.
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்
இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இந்த 2022 ஆம் ஆண்டு ஒரு கலவையான முதலீட்டுச் சூழ்நிலையைத் தான் உருவாக்கியுள்ளது. 2022 துவக்கத்தில் சிறப்பான லாபத்தை அளித்த பங்குச்சந்தை முதலீடுகள் ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய பின்பு அதிகப்படியான மாற்றங்களை எதிர் கொண்டது.
பெடரல் ரிசர்வ் முடிவு
சமீபத்தில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகளுக்குப் பின்பு மும்பை பங்குச்சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்து முதலீட்டாளர்கள் கூடுதலான லாபத்தை அடைய துவங்கினர்.
டாடா குழுமம்
இந்த நிலையில் டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனங்களாகக் கருதப்படும் டாடா ஸ்டீல், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் ஆகியவை 2022ஆம் ஆண்டின் ஜனவரி 1 முதல் டிசம்பர் 2 வரையிலான காலகட்டத்தில் 5 - 10 சதவீதம் வரையிலான சரிவை பதிவு செய்துள்ளது. 2021ல் இதே நிறுவனங்கள் 30- 163 சதவீதம் வரையில் லாபத்தைப் பெற்றது.
சரிவில் இருக்கும் நிறுவனங்கள்
டாடா குழுமத்தில் 2022 ஆம் ஆண்டின் வர்த்தகத்தில் சரிவில் இருக்கும் 13 நிறுவனங்களின் பட்டியல்
டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) லிமிடெட். : -51.41 சதவீதம்
தயோ ரோல்ஸ் : -46.02 சதவீதம்
ஆட்டோமோடிவ் ஸ்டாம்பிங்க்ஸ் : -39.85 சதவீதம்
ஆர்ட்சன் இன்ஜினியரிங் : -35.36 சதவீதம்
வோல்டாஸ் : -30.91 சதவீதம்
ராலிஸ் இந்தியா : -12.19 சதவீதம்
டாடா கம்யூனிகேஷன்ஸ் : -11.5 சதவீதம்
டாடா மோட்டார்ஸ் : -9.13 சதவீதம்
டாடா ஸ்டீல் லாங் தயாரிப்புகள் : -8.45 சதவீதம்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் : -7 சதவீதம்
டாடா மெட்டாலிக்ஸ் : -6.99 சதவீதம்
ஆட்டோமொபைல் கார்ப் ஆஃப் கோவா : -5.34 சதவீதம்
டாடா ஸ்டீல் : -0.4 சதவீதம்
மற்ற நிறுவனங்கள்
டாடா பவர் : 1.79 சதவீதம்
டைட்டன் : 4.54 சதவீதம்
டாடா காபி : 8.96 சதவீதம்
டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் : 9.42 சதவீதம்
நெல்கோ : 9.7 சதவீதம்
டாடா கெமிக்கல்ஸ் : 17.37 சதவீதம்
டின்பிளேட் : 18.37 சதவீதம்
TRF : 20.46 சதவீதம்
டாடா எல்க்ஸி : 20.6 சதவீதம்
அதிக லாபம் கொடுத்த நிறுவனங்கள்
ட்ரெண்ட் : 37.32 சதவீதம்
தேஜாஸ் நெட்வொர்க்ஸ் : 57.94 சதவீதம்
பெனாரஸ் ஹோட்டல்கள் : 64.27 சதவீதம்
டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப் : 72.83 சதவீதம்
இந்தியன் ஹோட்டல்ஸ் கோ : 79.4 சதவீதம்
ஓரியண்டல் ஹோட்டல்கள் : 112.8 சதவீதம்


Click it and Unblock the Notifications