ஒருவருடைய திறனுக்கும் படிப்பிற்கும் சம்பந்தம் கிடையாது. நாம் அறிந்த படிக்காத மேதைகள் பலர். ஆனால் ஒருவருடைய படிப்பிற்கும் அவர் வாங்கும் சம்பளத்திற்கும் கண்டிப்பாகத் தொடர்பு உண்டு.
உங்களுடைய கனவு ஆறு இலக்க சம்பளமா? அப்படியெனில் அமெரிக்காவில் உள்ள சில குறிப்பிட்ட இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பத்தைத் தட்டி விடுங்கள்.
மில்லியனர்களை உருவாக்கும் டாப் பல்கலைக்கழகம் இது தான்..?
பல்கலைக்கழகங்களின் தாக்கம்
ஹென்லி & பார்ட்னர்ஸின் புதிய அறிக்கையின்படி, இன்று அமெரிக்காவில் உள்ள சென்டி மில்லியனர்களில் 35% பேர் அந்த நாட்டில் உள்ள 8 கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து வந்தவர்கள். அந்த நாட்டில் ஏறக்குறைய 4,000 கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை, உங்களுக்குச் சொல்லும் செய்தி புரிகின்றதா? அமெரிக்காவில் உள்ள சுமார் 65% சென்டி மில்லியனர்கள் நாட்டின் பிற கல்லூரிகளில் இருந்து வந்தவர்கள்.
லிஸ்ட் மிகச் சிறியது
ஹார்வர்ட், எம்ஐடி, ஸ்டான்போர்ட், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், கொலம்பியா, யேல், கார்னெல் மற்றும் பிரின்ஸ்டன் ஆகியவற்றில் இருந்து அமெரிக்காவின் மூன்றில் ஒரு பங்கு பெரும் செல்வந்தர்கள் இங்கிருந்து வந்தவர்களே என்று ஹென்லி & பார்ட்னர்ஸின் கல்விச் சேவைகளின் குழுத் தலைவர் ஜான் மில்னே கூறுகிறார்.
வந்தவர்களே வென்றனர்
இங்கே குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், அமெரிக்காவின் கணிசமான எண்ணிக்கையிலான சென்டி மில்லியனர்கள் வெளிநாட்டு மாணவர்களாக இருந்தனர். உண்மையில், அமெரிக்கக் கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை, ஒரு இலாப நோக்கற்ற சிந்தனைக் குழு அறிக்கையின் படி, அமெரிக்காவில் உள்ள பில்லியன் டாலர் நிறுவனங்களில் 25% க்கும் குறைவான நிறுவனங்கள் சர்வதேச மாணவர்களால் நிறுவப்பட்டன.
முதல் இடம்
ஆச்சரியப்படத்தக்க வகையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், மசாசூசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவை இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தன.
சென்டி-மில்லியனர்
சென்டி-மில்லியனர் என்றால் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பைக் கொண்டு இருப்பவர்கள். பரம்பரையாகச் சொத்துக்கள் கொண்டு இருப்பது பெரிய விஷயமில்லை, ஆனால் படித்துச் சொந்தக்காலில் நின்று பணியாற்றி இவ்வளவு பெரிய தொகையைச் சம்பாதிப்பது என்பது மிகப்பெரிய விஷயம்.
செல்வத்தின் அளவுகோல்
1990களின் பிற்பகுதியில், $30 மில்லியன் சொத்து மதிப்பு வைத்திருந்தாலே சென்டி-மில்லியனர் அளவுகோலாகக் கருதப்பட்டது. ஆனால் சொத்து மதிப்பு, விலைவாசி ஆகியவற்றில் கணிசமாக உயர்ந்துள்ளன. இதனால் தற்போது இது $100 மில்லியன் என்கிற புதிய அளவுகோலாக உள்ளது.
1. ஹார்வர்ட் பல்கலைக்கழகம்:
அமெரிக்காவில் உள்ள 7% மில்லியனர்கள் இங்கிருந்து வந்தவர்களே. இது நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் ஆகும். மிகப்பெரிய தொழில்நுட்ப வல்லுநர்களான பில் கேட்ஸ் முதல் மார்க் ஜுக்கர்பெர்க் வரை இங்கிருந்து வந்தவர்களே.
QS அறிக்கையின் படி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி வேலை வாய்ப்புத் தரவரிசை சர்வதேச அளவில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. ஹார்வர்டின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று அதன் எம்பிஏ வேலை வாய்ப்புத் திட்டமாகும். QS குளோபல் எம்பிஏ தரவரிசை 2023 பட்டியலின் படி இது நான்காவது இடத்தில் உள்ளது. .
2. மசாசுசட்ஸ் தொழில் நுட்பக் கல்லூரி:
QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2023 படி இது முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மில்லியனர்களில் சுமார் 5 சதவீதம் பேர் MIT முன்னாள் மாணவர்கள் ஆவார்கள்.
3. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்:
ஸ்டான்போர்ட் MIT உடன் இணைந்துள்ளது. அமெரிக்காவின் மில்லியனர்களில் 5 சதவீதம் பேர் உருவாக்க காரணமாக உள்ளது. இது QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2023 இல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் பட்டதாரி வேலைவாய்ப்புக்கான தரவரிசையில் இது உலகில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
4. பென்சில்வேனியா பல்கலைக்கழகம்:
பென்சில்வேனியா பல்கலைக்கழகம் அமெரிக்கச் சென்டி மில்லியனர்களில் 4% ஐ உருவாக்கியுள்ளது. இது QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2023 இல் 13 வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் பட்டதாரி வேலைவாய்ப்புக்கான தரவரிசையில் இது உலகில் 19 வது இடத்தைப் பிடித்துள்ளது.
5. கொலம்பியா பல்கலைக்கழகம்:
அமெரிக்காவின் பணக்காரர்களில் சுமார் 4 சதவீதம் பேர் இங்கிருந்து வந்தவர்களே. வாரன் பஃபெட் இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.
QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2023 இல் கொலம்பியா பல்கலைக்கழகம் 22 வது இடத்தைப் பிடித்தது. மற்றும் பட்டதாரி வேலைவாய்ப்புக்கான தரவரிசையில் உலகில் 18 வது இடத்தைப் பிடித்துள்ளது.
6. யேல் பல்கலைக்கழகம்:
QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2023 இல் இந்தப் பல்கலைக்கழகம் 18 வது இடத்தில் உள்ளது. யேல் அமெரிக்காவின் மில்லியனர்களில் 4% ஐ உருவாக்கியுள்ளது.
7. கார்னெல் பல்கலைக்கழகம்:
கார்னெல் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் இத்தாக்கா-வில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2023 இல் இது 20 வது இடத்தில் உள்ளது. இது நாட்டின் 3% பணக்காரர்களை உருவாக்கியுள்ளது.
8. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்:
இது இந்தப் பட்டியலை முழுமையாக்கும். அமெரிக்காவில் உள்ள மிகவும் வசதி படைத்தவர்களில் 3% பேர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2023 இல் இது 16 வது இடத்தில் உள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications