உலக அளவில் டேட்டிங் செயலிகளின் பயன்பாடு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் டிண்டெர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
பொதுவாக டேட்டிங் செயலிகள் நம்முடைய புகைப்படம், லொகேஷன், வயது உள்ளிட்ட தகவல்களை பெறுகின்றன. ஆனால் பெரும்பாலான டேட்டிங் செயலிகள் தங்களது பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை விளம்பரதாரர்களுக்கு விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

Firefox இண்டர்நெட் பிரவுசர் மோசில்லாவின் டெவலப்பர்கள் 25 டேட்டிங் செயலிகளை ஆய்வு செய்தனர் , தங்களின் மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளனர். அவற்றில் 22 செயலிகள் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.
டேட்டிங் செயலிகள் உங்களின் பெரும்பாலான தனிப்பட்ட தகவல்களை பெறுகின்றன. குறிப்பாக உங்களின் புகைப்படம், லொகேஷன் ஆகிய தகவல்களை பகிர்வது அவசியம். இத்தகைய செயலிகள், உங்களுக்கு சிறந்த துணையை தேடி தருவதாக கூறி தகவல்களை பெறுகின்றன.
ஆனால் அவற்றை விளம்பர நிறுவனங்களுக்கே விற்பனை செய்யவே பயன்படுத்துகின்றனர் என இந்த ஆய்வில் பங்கேற்ற மிசாரிக்கோ தெரிவித்துள்ளார்.
இந்த குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கிட்டத்தட்ட 25 சதவீத செயலிகள் உங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் பகிரும் போது உள்ளிடும் தகவல்களை திருடுவதாகவும், குறிப்பாக எந்த நேரத்தில் எடுத்தீர்கள், எந்த பகுதியில் எடுத்தீர்கள் என்பன போன்ற முக்கியமான தகவல்களை சேகரிப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Hinge, Tinder, OKCupid, Match, Plenty of Fish, BLK, and BlackPeopleMeet ஆகிய செயலிகள் தங்களது பயனாளர்களின் ஜியோ லொகேஷன் தகவல்களை துல்லியமாக அணுகக் கூடிய வசதிகளை பெற்றுள்ளன.
இது பயனாளர்களின் சேகரிக்க பயன்படுத்தப்படுகிறது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சில செயலிகள் நீங்கள் அந்த செயலியை இயக்கவில்லை என்றாலும், பேக்ரவுண்டில் இருந்து உங்களது தகவல்களை சேகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனவே டேட்டிங் செயலிகளை பயன்படுத்துபவர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க மூன்று யோசனைகளையும் இந்த ஆய்வாளர்கள் வழங்கியுள்ளனர் முதலில் உங்களது டேட்டிங் செயலிகளை உங்களது லிங்குடின் ப்ரோபைலை எப்படி பயன்படுத்துவீர்களோ அதேபோல பயன்படுத்த வேண்டும், மூன்றாம் தரப்பு கணக்கிலிருந்து நீங்கள் ஒருபோதும் இதில் லாகின் செய்யக்கூடாது என கூறியுள்ளார்.
மேலும் செயலிகளுக்காக உங்கள் போனில் வழங்கப்பட்டுள்ள அணுகல்களை அடிக்கடி பார்வையிட்டு தேவையில்லாத அனுமதிகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட யோசனைகளை வழங்கியுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications