கர்நாடகத்தில் 80 சதவீத குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறதா? சித்தராமையா அதிரடி உத்தரவு

கர்நாடக மாநிலத்தில் 80 சதவீத குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மொத்தம் 4,37,23,911 குடும்பங்கள் பிபிஎல் எனப்படும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்ப அட்டைகளை வைத்துள்ளன. இன்னும் 2.95 லட்சம் விண்ணப்பங்கள் பிபிஎல் ரேஷன் கார்டு கேட்டு கோரிக்கை வந்துள்ளன, ஆனால் இதற்கு ஒப்புதள் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

நிதி ஆயோக்கின் படி, கர்நாடகத்தில் ஏழை மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஆனால் பிபிஎல் ரேஷன் கார்டுகள் மட்டும் அதிகரித்துள்ளது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகத்தில் 80 சதவீத குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறதா? சித்தராமையா அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் 40 சதவீத குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றன.
எனவே இதுகுறித்து ஒரு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. தகுதியற்றவர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் இறந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களும் நீக்கப்பட வேண்டும் என்றார் முதல்வர் சித்தராமையா.

ஒரு குறிப்பிட்ட அளவு சம்பாத்தியத்துக்குக் குறைவாக பெறும் குடும்பத்துக்கான அடையாள அட்டைதான் பிபிஎல் எனப்படும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்ப அட்டைகள். வருவாய் அளவு, நிலம் உரிமை, தொழில், குடும்பச் சொத்துகள் ஆகியவற்றை வைத்து ஒருவரது வருமான மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.24,200க்கு கீழ் வருமானம் இருந்தால் அந்தக் குடும்பம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக எடுத்துக் கொள்ளப்படும்.

நகரங்களில் வாழக்கூடிய ஒருவர் தினமும் ரூ.33ம், கிராமப்புறங்களில் ரூ.27ம் செலவழிக்கக்கூடியவராக இருந்தால் அவர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவராகக் கருதப்படுவார்.

கர்நாடக அன்ன பாக்யா திட்டம் 2023இன் கீழ் பிபிஎல் பிரிவில் உள்ள குடும்பத்தாருக்கு மாதம் 10 கிலோ அரிசி வழங்கப்படும். இல்லாவிட்டால் ஒரு கிலோ அரிசிக்கு பதிலாக ரூ.34 வழங்கப்படும்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கர்நாடக மாநிலத்தில் வருடத்துக்கு ரூ.1.20 லட்சம் வருவாய் பெறும் குடும்பம் பிபிஎல் ரேஷன் கார்டுக்குத் தகுதி பெறும்.
மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட முறையின்படி, பிபிஎல் (வறுமைக் கோட்டிற்கு கீழே) பட்டியலின் கீழ் பயனாளி ஆவதற்கான குடும்ப வருமான வரம்பு ஆண்டுக்கு ரூ.27,000. ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1000ஐ தாண்டினால் அந்த குடும்பம் பிபிஎல் பட்டியலில் சேர்க்கப்படாது.

அந்தவகையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தற்போது பிபிஎல் கார்டுகள் பற்றி ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவினால் கணிசமாக அந்த கார்டுகளின் எண்ணிக்கை குறையும். இதனால் மாநில அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பு குறையும்.

Story written by: Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+