இந்தியாவில் அண்மைக்காலமாக Work life Balance எனப்படும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் சமமான அளவில் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக வேலை தேடுவோரின் மனநிலையும் ஆட்களை வேலைக்கு தேர்வு செய்யக்கூடிய நிறுவனங்களின் நிலைப்பாடும் கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவிலான மாற்றத்தை கண்டிருக்கிறது.
அந்த வகையில் இந்தியாவில் தற்போது வேலை செய்து வரக்கூடிய நபர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த ஒரு முக்கியமான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. சர்வதேச அளவிலான கல்வி சம்பந்தப்பட்ட கிரேட் லேர்னிங் என்ற நிறுவனம் Skilling Trends report 2025-2026 என்ற பெயரில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

புது வேலை தேடும் 82% பணியாளர்கள்:
அதில் இந்தியாவை சேர்ந்த 82 சதவீத தொழில் நிபுணர்கள் தாங்கள் புதிதாக வேலை தேடுவதாக தெரிவித்து இருக்கிறார்கள். இதில் 51% பேர் முழு ஈடுபாட்டுடன் புதிய வேலையை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். இது ஊழியர்களின் வயதையொட்டி மாறுபடுகிறது என அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 45 லிருந்து 60 வயதுக்குட்பட்ட நபர்கள் பெரும்பாலும் புதிய வேலைக்கு செல்ல விரும்பவில்லையாம். இவர்களின் 39 சதவீதம் பேர் மட்டுமே தாங்கள் புதிய வேலையை தேடி வருவதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
Work life Balance-க்கு முக்கியத்துவம்:
அதே வேளையில் இந்தியாவை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் மத்தியில் வொர்க் லைஃப் பேலன்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற மனநிலை தற்போது உருவாகி இருப்பதாக இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. புதிதாக வேலை தேடுபவர்கள் தங்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு கிடைக்கிறது என்பது மட்டும் இல்லாமல் இந்த வேலையின் மூலம் தங்களால் தங்களுடைய சொந்த வாழ்க்கைக்கும் வேலைக்கும் சமமாக நேரம் ஒதுக்கீடு செய்ய முடியுமா என்பதையும் ஒரு காரணியாக கொண்டு தான் புதிய வேலைக்கு மாறுவதை தீர்மானிக்கிறார்களாம்.
45 லிருந்து 60 வயதுக்குட்பட்ட நபர்களில் 26 சதவீதம் பேர் தங்களுக்கு சம்பளத்தை விட வொர்க் லைஃப் பேலன்ஸ் முக்கியம், அதற்கு ஏற்ற வேலையாக இருந்தால் உடனடியாக மாறுவதற்கு தயாராக இருக்கிறோம் என பதில் அளித்து இருக்கிறார்கள். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களிடம் ஆய்வு நடத்தி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன.
ஏஐ வருகைக்கு எதிர்ப்பா, வரவேற்பா?
தற்போது பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் நுழைந்துவிட்ட நிலையில் எம்பிஏ மற்றும் பிகாம் படிப்புகளை முடித்தவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளனர். இந்த பிரிவில் வேலை செய்யும் நபர்களில் 83 சதவீதம் பேர் ஏஐ வருகையை ஆதரித்துள்ளனர். இதுவே பொறியியல் மற்றும் பி டெக் படிப்பை முடித்தவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையை நாங்கள் ஏற்க முடியாது என தெரிவித்து இருக்கிறார்கள்.
திறன் மேம்பாடுக்கு வரவேற்பு:
2026 ஆம் நிதியாண்டினை பொருத்தவரை 80 சதவீத தொழில் நிபுணர்கள் தங்கள் வேலையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து வரக்கூடிய தொழில்நுட்பங்களை நாங்கள் கற்று கொள்ள வேண்டும் எங்களுடைய திறன்களை மேம்படுத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்கள்.இது கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இந்த சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக இந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிற.து குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேர்னிங் பிரிவில் திறன் மேம்பாடு செய்ய வேண்டும் என பெரும்பாலானவர்கள் கூறியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications