மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் மற்றும் எஸ்ஏபி போன்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மந்தநிலை மற்றும் பொருளாதார நிச்சயமற்ற அச்சங்களுக்கு மத்தியில் 2022 இறுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை தங்கள் அலுவலகங்களில் பணிநீக்கம் செய்துள்ளனர்.
இந்த பணிநீக்கம் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என வெளிநாடுகளில் மட்டும் அல்லாமல் இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் இந்திய கிளைகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை தாண்டி இந்தியாவில் சுமார் 82 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்தியாவில் பணிநீக்கங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இது எப்போது முடியும் என்ற கேள்வி அனைவரிடத்திலுமே உள்ளது.
கோகுல் ராஜாராம்
கூகுள் Adsense-ன் காட்பாதர் என அழைக்கப்படும் கோகுல் ராஜாராம் அடுத்த 9 மாதத்தில் நிறுவனங்கள் தோல்வி அடையும், மூடப்படும், பணிநீக்கம் செய்யும் என எச்சிரித்துள்ளார். இது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
அமெரிக்கா, ஐரோப்பா
ஆனால் இதேவேளையில் அமெரிக்கா, ஐரோப்பாவில் வங்கி பிரச்சனைகள் பெரும் சரிவில் இருந்து காப்பாற்றப்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களாக பங்குச்சந்தை முதலீட்டில் நிலைமை மாறி லாபகரமாக மாறியுள்ளது.
ஸ்டார்ட்அப் சந்தை
இதனால் ஸ்டார்ட்அப் சந்தையிலும் நிலைமை விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்பட்டாலும், புதிய முதலீடுகளை எளிதாக பெறக்கூடிய நிலையில் தற்போது யாருமே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இதே நேரத்தில் அதிக வாடிக்கையாளர்கள், மக்களுக்கு தேவைப்படும் சேவைகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் முதலீட்டை பெற வாய்ப்புகள் உள்ளது.
6 மாதம் முதல் 1 வருட
இதை தான் கோகுல் ராஜாராம் சரியான PMF இல்லாத பட்சத்தில் நிறுவனம் மூடப்பட வேண்டும் என கூறுகிறார். இந்தியாவில் எப்போது பணிநீக்கம் குறையும் என்றால் அடுத்த 6 மாதம் முதல் 1 வருடத்தில் முதலீட்டு சந்தையும், பணவீக்கமும் தொடர்ந்து குறைந்தால் கட்டாயம் நிலைமை மாறும். அதுவரையில் பெரிய பணிநீக்கம் இல்லாவிட்டாலும் சிறிய எண்ணிக்கையிலான பணிநீக்கம் இருக்கும்.
82 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இந்தியாவில் சுமார் 82 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடந்த 6- 8 மாதத்தில் சுமார் 23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதில் 19 Edtech நிறுவனங்கள் அதாவது டிஜிட்டல் கல்வி சேவை அளிக்கும் அனைத்து நிறுவனங்கள் மட்டுமே 8460 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பின்பு Edtech நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
Byju's, ஓலா, OYO
இந்திய ஸ்டார்ட்அப் பணிநீக்கத்தில் Byju's, ஓலா, OYO ஆகியவை முன்னிலையில் உள்ளது. இதை தொடர்ந்து மீஷோ, MPL, லிவ்ஸ்பேஸ், இன்னோவ்ஏசர், உதான், அன்அகாடமி, வேதாந்து ஆகியவை அதிகப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
Dukaan நிறுவனம்
SAAS தளமான Dukaan நிறுவனம் கடந்த வாரம் மட்டும் சுமார் 30 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இது கடந்த 6 மாதத்தில் இந்நிறுவனத்தின் 2வது பணிநீக்கமாகும். 2வது சற்று பணிநீக்கத்தில் சேல்ஸ், அக்கவுண்ட் பிரிவில் இருந்து அதிகமானோர் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.
Sharechat பணிநீக்கம்
இந்தியாவின் பிரபலமான சமுக வலைத்தள நிறுவனமான Sharechat நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் சுமார் 20 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்தது பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்த பணிநீக்கத்தின் மூலம் சுமார் 500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
ஐடி துறை
அடுத்த 18 மாதத்தில் உலகின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களும் பணிநீக்கம் செய்யுமா என்ற வேள்வி அனைத்து ஐடி ஊழியர்கள் மத்தியிலும் இருக்கிறது. இதற்கான பதில் கட்டாயம் மார்ச் காலாண்டு முடிவுகளில் தெரிய வரும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications