ஜூலை 2020 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்தில் என்சிஆர் பகுதியில் 21,750 வீடுகளும், மும்பை மெட்ரோபொலிடன் பகுதியில் 47,140 வீடுகளும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் வீடுகளை வாங்கியுள்ள 85 சதவீதம் பேர் முதல் முறையாக வீடு வாங்கியவர்கள். அதாவது முதல் முறையாகச் சொந்த வீடு வாங்கியவர்கள்.
இந்திய மக்களுக்குச் சொந்த வீடு என்பது எப்போதுமே ஒரு வாழ்நாள் கனவு தான், இப்படி இருக்கையில் இந்தக் கொரோனா லாக்டவுன் காலத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அறிவித்த அதிரடி ஆஃபர்கள், வங்கிகளில் அடுத்தடுத்துக் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் சாமானிய மக்களுக்குச் சொந்த வீடு வாங்க பெரிய அளவில் உதவியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் என்சிஆர் பகுதியில் வீடு வாங்கிய செய்யப்பட்ட 15 சதவீதம் பேரும், மும்பை மெட்ரோபொலிடன் பகுதியில் வீடு வாங்கிய 65 சதவீதம் பேரும் சிறிய வீட்டில் இருந்து பெரிய வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
கொரோனா மூலம் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் ஊழியர்களுக்கு work from home, குழந்தைகளுக்கு இணைய வழியில் கல்வி என மாறிய காரணத்தால் எவ்விதமான பிரச்சனையுமின்றி மக்கள் புதிய வீடுகளுக்குத் தொலைவு என்றாலும் வாங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications