2 மாசம் டிஜிட்டல் அரஸ்ட்.. ரூ. 20 கோடி மோசடி..! 86 வயசு பாட்டியை கூட விட்டு வைக்காத கும்பல்..!

மும்பையில் அதிபயங்கரமான மோசடி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு வயதான மூதாட்டியை ஏமாற்றி பெரும் தொகையை மோசடி செய்துள்ளனர். போலியான விசாரணை மற்றும் மிரட்டல்களை கையில் எடுத்து 86 வயதான மூதாட்டியிடம் ரூ. 20 கோடி கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதோடு வயதானவர்களுக்கு மோசடி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.

இந்தத் தொகையை கேட்பதற்கே மலைப்பாக இருக்கிறது. இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்ற அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் பார்ப்போம். முதலில் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சிபிஐ அதிகாரி போல காட்டிக் கொண்ட ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

சந்திப் ராவ் என்ற பெயரில் பேசிய மோசடிக்காரர்.. மூதாட்டியிடம் அவருடைய பெயரில் ஒரு வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருப்பதாகவும் அந்த கணக்கை பயன்படுத்தி ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் அதற்காக போலி நீதிமன்ற விசாரணையை நடத்தியும் அவரை நம்ப வைத்துள்ளார்.

2 மாசம் டிஜிட்டல் அரஸ்ட்.. ரூ. 20 கோடி மோசடி..! 86 வயசு பாட்டியை கூட விட்டு வைக்காத கும்பல்..!

இன்றைய மோசடிக்காரர்கள் அதிகம் கையாளும் யுத்திகளில் இதுவும் ஒன்று. நீதிமன்றத்தை ஒத்த செட்டப்பை செய்து வைத்துக் கொண்டு அதற்கேற்ற காஸ்டியூம்களை போட்டுக்கொண்டு பாதிக்கப்படுபவர்களை வீடியோ காலில் அழைத்து பயமுறுத்தும் யுக்தி தான் இது.

இதே யுக்தியை தான் பாதிக்கப்பட்ட மூதாட்டியிடம் பயன்படுத்தியுள்ளனர். அதோடு நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூற வேண்டாம் என்று கூறி இரண்டு மாதங்கள் வரை தொடர்ந்து ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒரு முறை மூதாட்டியின் இருப்பிடத்தை சரிபார்க்க வீடியோ காலில் அழைப்பு விடுத்துள்ளனர். இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்த மூதாட்டியின் வீட்டில் வேலை பார்க்கும் ஒருவர்.. அவருடைய நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்து அந்த மூதாட்டியின் மகளுக்கு தெரிவித்தார்.

அதோடு நடக்கும் அனைத்தையும் உண்மையானது போல காண்பிக்க சந்திப் ராவ், வீடியோ அழைப்பில் மூதாட்டியிடம் அவருடைய பிள்ளைகளும் கைது செய்யப்படுவார்கள் என்று மிரட்டியுள்ளார். டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் கீழ் காவல் நிலையத்திற்கு வர வேண்டியதில்லை என்றும், காவல்துறையினர் தொடர்ந்து உங்களை கண்காணிப்பார்கள் என்றும் கூறினார். மூதாட்டியின் வாட்ஸ்அப் மூலமாகவே அவருடைய குடும்பம், வணிகம், முதலீடுகள் பற்றிய அனைத்து தகவல்களையும் மோசடியாளர்கள் சேகரித்தனர்.

அடுத்ததாக ரஞ்சன் என்ற மற்றொரு நபர் தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் மூதாட்டியை தொலைபேசியில் அழைத்து போலி உச்ச நீதிமன்ற அறிவிப்புகளை அனுப்பி உள்ளார். அவரது பெயரை இந்த வழக்கிலிருந்து நீக்க பணத்தை நீதிமன்ற கணக்கிற்கு மாற்றும்படி கேட்டுள்ளார். விசாரணைக்கு பிறகு பணத்தை திருப்பி தருவதாகவும் கூறியுள்ளார்.

பயந்து போன மூதாட்டி அவருடைய வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் மோசடிக்காரர்களின் கணக்கிற்கு அனுப்ப தொடங்கியுள்ளார். அப்போது மூதாட்டியின் வீட்டில் வேலை செய்பவர் அவருடைய நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்து அவர் எப்போதும் தனிமையில் இருப்பதாகவும், தொலைபேசியில் கோபமாக பேசுவதாகவும் சந்தேகப்பட்டார்.

இதை அவருடைய மகளுக்கு தெரிவித்த போதுதான் இந்த மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அவருடைய மார்ச் 4 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் பதிவு செய்யப்பட்டவுடன் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். தொழில்நுட்ப உதவியுடன் மோசடிக்காரர்களின் அழைப்புகள் பரிவர்த்தனைகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். இதன் மூலம் மலட்டைச் சேர்ந்த சயான் ஷேக் மற்றும் மீரா ரோடை சேர்ந்த ரசிக் பட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மூதாட்டியிடம் இருந்து பணத்தைப் பெற்று அதை கிரிப்டோ கரன்சியாக மாற்றியதும் தெரியவந்துள்ளது.

வீட்டில் இருக்கும் பெரியவர்களின் நடத்தையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக அவர்களை கண்காணியுங்கள். ஆனால் அதற்கு முன்னரே தற்போது நடந்து கொண்டிருக்கும் மோசடி சம்பவங்கள் குறித்து அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சில விஷயங்கள் தெரிந்தால் கூட இதுபோன்ற சம்பவங்கள் நடக்கையில் உங்களிடம் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் இருக்கலாம். விழிப்புணர்வை தவிர இது போன்ற மோசடிகளை தடுப்பதற்கு வேறு எந்த வழியும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+