2020ஆம் சம்பள உயர்வை எதிர்பார்த்து இருந்த பல கோடி ஊழியர்களுக்குக் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே, அதிலும் பலருக்குச் சம்பள குறைப்பு, சிலருக்குப் பணி நீக்கம் எனப் பல அதிர்ச்சிகளைக் கொடுத்த ஒரு ஆண்டாக அமைந்தது.
கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புக் காரணமாக நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் இத்தகைய கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது.
ஆனால் 2021ஆம் ஆண்டில் ஊழியர்களுக்குக் கட்டாயம் சம்பள உயர்வு கொடுக்க முடிவு செய்துள்ளோம் என 87 சதவீத நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இது இந்தியாவில் இருக்கும் பல கோடி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது.
சம்பள உயர்வு
பல முன்னணி ஐடி நிறுவனங்கள் கூட இந்த வருடம் சம்பள உயர்வு கொடுக்க முடியாத நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது வெளிப்படையாகத் தெரிவித்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஐடி துறையில் பல நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் இருந்து சம்பள உயர்வு கொடுப்பதாக அறிவித்தாலும், கிட்டத்தட்ட 40 சதவீத நிறுவனங்கள் இந்த வருடச் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
2021ல் அட்டகாசம்
இந்நிலையில் Aon Salary செய்த ஆய்வில் 2021ஆம் ஆண்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கை எப்படி இருந்தாலும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொடுப்பதாகச் சுமார் 87 சதவீதம் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
2020ல் வெறும் 71 சதவீத நிறுவனங்கள் மட்டுமே ஊதிய உயர்வு கொடுப்பதாகத் தெரிவித்தது.
அளவீடு
மேலும் இந்த ஆய்வில் சுமார் 61 சதவீத நிறுவனங்கள் வெளிப்படையாகவே 2021ல் தனது ஊழியர்களுக்கு 5 முதல் 10 சதவீதம் வரையிலான சம்பள உயர்வைக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் வெறும் 45 சதவீத நிறுவனங்கள் மட்டுமே 2020 ஆண்டுக் காலகட்டத்தில் சம்பள உயர்வைக் கொடுத்துள்ளது.
இந்த ஆய்வில் சுமார் 20 துறைகள் சார்ந்த 1050 நிறுவனங்கள் கலந்துகொண்டு தனது பதிலைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியத் துறைகள்
2020ஆம் ஆண்டுப் பெருமளவிலான நிறுவனங்கள் சம்பள உயர்வைக் கொடுக்காத காரணத்தால் 2021ல் HiTech, ஐடி, ஐடீஸ், லைப் சையின்ஸ், ஈகாமர்ஸ், கெமிக்கல் ஆகிய துறை சார்ந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட 5 முதல் 10 சதவீத சம்பள உயர்வை விடவும் அதிகச் சம்பள உயர்வு கொடுக்க முடிவு செய்துள்ளது.
இந்தத் துறையில் நீங்களும் இருந்தால் என்ஜாய் பண்ணுங்க, அப்படியே கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications