மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவர் பார்க்கவா இந்தியாவில் இருக்கும் 88 சதவீத குடும்பங்கள் தற்போது கார் வாங்கும் வசதியில் இல்லை எனக் கூறியிருக்கிறார். 2025 ஆம் நிதியாண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் நான்காவது காலாண்டு அறிக்கை வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பேசி இருக்கும் நிறுவன தலைவர் ஆர் சி பார்கவா , உள்நாட்டில் பயணிகள் வாகன சந்தை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவில் கார் தேவை குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பல ஆண்டுகளாகவே உள்நாட்டில் கார்களின் தேவையும் கார்களை வாங்குவோர் எண்ணிக்கையும் சரிவடைந்து வருகிறது என தெரிவித்தார்.

மக்களின் வாங்கும் திறன் குறைந்திருப்பதே இதற்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருக்கும் 300 மில்லியன் குடும்பங்களில் 200 மில்லியன் குடும்பங்களின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் கீழ் தான் இருக்கிறது. இவர்களுக்கு சொந்தமாக ஒரு கார் வாங்குவது என்பது நீண்ட கால கனவாகவே இருக்கிறது என பார்க்கவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல் முதலாக கார் வாங்கக்கூடிய குடும்பங்கள் பெரும்பாலும் மாருதி சுசுகி கார்களை வாங்குவதற்கு தான் விரும்புவார்கள். ஆனால் தற்போது அந்த சந்தையே ஆட்டம் கண்டு இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். கார்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலை உயர்வு, அரசு கொண்டு வந்திருக்கும் பல்வேறு ஒழுங்கு முறைகள் ஆகியவை காரணமாக சிறிய ரக கார்களின் விலை கூட திடீரென உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் சொந்தமாக கார் வாங்கும் கனவையே விட்டு விட்டனர் என தெரிவித்திருக்கிறார்.
ஒட்டுமொத்தமாகவே கார்களின் விலை உயர்ந்து விட்டது எனவே மக்கள் அவற்றை வாங்குவதை நிறுத்தி விட்டனர் என அவர் கூறுகிறார். எதிர்வரும் நாட்களிலும் இந்தியாவில் கார் விற்பனை எதிர்பார்த்த அளவு இருக்காது என தெரிவித்திருக்கும் அவர் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கணிப்புகளை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
இதன்படி 2025 - 26 ஆம் நிதி ஆண்டுக்கான கார் விற்பனை வளர்ச்சி 1-2 சதவீதமாக மட்டுமே இருக்கும் என கூறுகிறார். கடந்த ஆண்டு கூட 3 சதவீத வளர்ச்சியில் இருந்த கார் விற்பனை இந்த ஆண்டு மந்த நிலைக்கு செல்லும் என தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இருந்த அளவுக்கு கூட உள்நாட்டில் கார்களுக்கான தேவை அதிகரிக்கவில்லை மாறாக குறைந்து தான் வருகிறது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
உள்நாட்டில் விற்பனை மந்த நிலைக்கு சென்றாலும் ஏற்றுமதி பிரகாசமான ஒரு வாய்ப்பாக உருவாகி இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஏற்றுமதி 17 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. நடப்பாண்டில் 20 சதவீதமாக அதிகரிக்க கூடும் என மாருதி சுசுகி நிறுவனம் எதிர்பார்க்கிறது. 2025 ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி மாருதி சுசுகி நிறுவனத்தின் வருமானம் 9 சதவீதமும் லாபம் 4.3 சதவீதமும் குறைந்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications