இந்தியாவின் பெரும்பாலான ஐசி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்குத் திரும்ப உத்தரவிட்டு உள்ளது, இதனால் வீட்டில் இருந்து பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்குச் சென்று பணியாற்ற வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
இந்தியாவின் டாப் 4 ஐடி சேவை நிறுவனங்களில் இன்போசிஸ் மட்டுமே ஊழியர்களின் விருப்பத்தின் பெயரில் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என அறிவித்துள்ளது, மற்ற அனைத்து ஐடி நிறுவனங்களும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதைக் கட்டாயமாக்கியுள்ளது.
இந்த நிலையில் ஐடி ஊழியர்கள் மத்தியில் முக்கியமான ஆய்வு செய்யப்பட்டதில் ஐடி நிறுவனங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் கிடைத்துள்ளது.
ஐடி ஊழியர்கள்
இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் பெரும்பாலான ஐடி ஊழியர்கள் தங்களுக்கு ஏற்ற சலுகைகள் மற்றும் வசதிகளை அளிக்கும் நிறுவனங்களுக்கு மாற ரெடியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
வொர்க் ப்ரம் ஹோம்
பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்துள்ள நிலையில், தற்போது வொர்க் ப்ரம் ஹோம் சலுகை கொடுக்கும் நிறுவனத்திற்கு மாறத் தயாராகியுள்ளனர்.
19 ஐடி நிறுவனங்கள்
CIEL HR Services நிறுவனம் சுமார் டாப் 19 ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் 1000க்கும் அதிகமான ஐடி ஊழியர்கள் மத்தியில் செய்த ஆய்வில் சுமார் 88 சதவீதம் பேர் தாங்கள் தற்போது பணியாற்றி வரும் அலுவலகம், வேலையை விட்டு வெளியேற தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அலுவலகம்
இதில் 46 சதவீதம் பேர் தங்கள் நிறுவனம் அலுவலகத்திற்கு வர கட்டாயப்படுத்துவதாலும், 46 சதவீதம் பேர் அதிகச் சம்பளம் கிடைக்கும் பணிகளுக்குச் செல்லவும், 8 சதவீதம் பேர் அலுவலகம் சென்றால் தங்களுடைய விருப்பம், பொழுதுபோக்கில் அதிக நேரம் செலவழிக்க முடியாது, தினமும் போக்குவரத்தில் அதிகம் நேரம், பணத்தைச் செலவு செய்வதில் விருப்பம் இல்லை என்றும் தெரிவித்து வேறு வேலைக்குச் செல்ல தயார் என அறிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்பு சந்தை
இந்திய சந்தையில் தற்போது வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது, இதேபோல் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் சுமார் 50 சதவீத ஊழியர்களைக் குறைவாகப் பணியில் சேர்த்துள்ளது. இந்த நிலையில் வொர்க் ப்ரம் ஹோம்-க்காகப் பணியை ராஜினாமா செய்வது தற்போதைய வேலைவாய்ப்புச் சந்தையில் பலன் அளிக்காது எனவும் ஹெச்ஆர் பிரிவு நிறுவனங்கள் கூறுகிறது.
டிசிஎஸ் மற்றும் விப்ரோ
டிசிஎஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் வாரத்தில் 3 நாட்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு ஊழியர்கள் வர வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இதனால் சொந்த ஊரில் இத்தனை நாள் இருந்த ஐடி ஊழியர்கள் பெரு நகரங்களுக்கு வர துவங்கியுள்ளனர்.
விரிவாக்கம்
இதேவேளை ஐடி ஊழியர்கள் அனைவரும் தற்போது பெரு நகர அலுவலகங்களுக்கு வர துவங்கியுள்ளதால் 2ஆம் மற்றும் 3 ஆம் தர நகரங்களில் ஐடி நிறுவனங்களின் அலுவலக விரிவாக்கத்தின் வேகம் குறையுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications