மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் தான் மத்திய அரசு 8ஆவது சம்பள கமிஷனையே அமைத்தது. 8ஆவது சம்பள கமிஷன் அனைத்து துறை அமைச்சகங்கள், மாநில அரசுகளிடம் தீவிர ஆலோசனை நடத்தியது. பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளையும் பெற்று பரிசீலனை செய்து வருகிறது.
8ஆவது சம்பள கமிஷன் பரிந்துரை வழங்கிய பின் 2028 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து தான் புதிய சம்பளம் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் இந்த இரண்டு ஆண்டு காலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய சம்பளமும் வழக்கம் போல ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலை படியும் உயர்த்தி வழங்கப்படும். சம்பள கமிஷன் தாமதம் ஆனதால் தங்களின் சம்பள உயர்வும் தாமதம் ஆகிறதே அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் தவறி போன இந்த இரண்டு ஆண்டுகளுக்கான சம்பளத் தொகையை மத்திய அரசு அரியர் தொகையாக கணக்கிட்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கிவிடும்.

எத்தனை மாதங்கள் தாமதம் ஆகிறதோ அத்தனை மாதத்திற்குமான வழங்க வேண்டிய கூடுதல் சம்பளம் கணக்கீடு செய்யப்பட்டு முறையாக ஊழியர்களுக்கு அரியர் தொகையாக வழங்கிவிடுவார்கள். அப்படி பார்க்கும்போது அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பணம் அரியர் தொகையாக கிடைக்கப் போகிறது என்பதை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
சம்பள கமிஷன் ஃபிட்மன்ட் ஃபேக்டரை அடிப்படையாகக் கொண்டுதான் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதற்கான கணக்கிட்டையே மேற்கொள்கிறது. 7ஆவது சம்பள கமிஷன் 2.57 என்ற ஃபிட்மண்ட் ஃபேக்டரை அடிப்படையாக கொண்டு சம்பள உயர்வு வழங்கியது. இந்த முறை 3.68 என்ற ஃபிட்மன்ட் ஃபேக்டரை கொண்டு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.
சம்பள கமிஷனும் மத்திய அரசும் இதனை ஏற்று கொண்டு ஃபிட்மண்ட் ஃபேக்டரை 3.68 என கணக்கீடு செய்தால் சம்பளம் தற்போது இருப்பதை விட மூன்றரை மடங்காக உயரும் என அர்த்தம். ஒரு அரசு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக தற்போது 18,000 ரூபாய் உள்ளது. இத்துடன் அவருக்கு வீட்டு வாடகை அலோவென்ஸ், அகவிலைப்படி ஆகியவை வழங்கப்படுகின்றன. ஃபிட்மண்ட் ஃபேக்டர் 3.68 என்றால் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 66,240 ரூபாயாக உயரும். அப்படி என்றால் கூடுதலாக 48,240 ரூபாய். இதனை தாமதமாகும் 24 மாதங்களுக்கு கணக்கிட்டால் 11,57,760 ரூபாய். அதாவது இந்த நபருக்கு அரியர் தொகையே 11.57 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
அடிப்படை சம்பளம் உயர உயர கிடைக்கும் அரியர் தொகையும் உயரும். எனவே சம்பள கமிஷன் தாமதம் ஆனாலும் அரசு ஊழியர்கள் கவலைப்பட தேவையில்லை. அதிலும் வீட்டு வாடகை அலொவென்ஸ் உயர்வோடு சேர்த்து அரியர் தொகை கணக்கிடப்பட்டால் அரியர் தொகை தாறுமாறாக உயரும்.


Click it and Unblock the Notifications

