மத்திய அரசு ஊழியர்களுக்கு 2026 ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து சம்பள உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்பள கமிஷனே கடந்த ஆண்டில் தான் அமைக்கப்பட்டது என்பதால் அவர்கள் ஆய்வு பணிகளை முடித்து பரிந்துரை வழங்கி அரசு அந்த பரிந்துரைகளுக்கு ஏற்ப சம்பளத்தை உயர்த்தி வழங்குவதற்கு 2028 ஆம் ஆண்டு ஜனவரி வரை தேவைப்படும் என சொல்லப்படுகிறது.
இந்தியாவை சேர்ந்த சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்கிறது. இதற்காக அரசு தரப்பில் சம்பள கமிஷன் என்பது அமைக்கப்படுகிறது. இந்த சம்பள கமிஷன் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு, தற்போதுள்ள வாழ்க்கை செலவினங்கள், பண வீக்கம் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு எவ்வளவு சம்பள உயர்வு வழங்கலாம் என்ற பரிந்துரையை அரசுக்கு வழங்கும்.

தற்போது ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுகிறார்கள். இந்த சம்பள கமிஷனின் காலம் 2025 டிசம்பர் 31ம் தேதி உடனே முடிந்துவிட்டது. ஜனவரி ஒன்றாம் தேதி 8ஆவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அது இரண்டு ஆண்டுகளுக்கு தாமதம் ஆகிறது. இந்த சூழலில் சம்பள கமிஷன் பணிகள் தாமதமானாலும் மத்திய அரசு ஊழியர்கள் அது குறித்து கவலைப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏனெனில் சம்பள கமிஷன் இரண்டு ஆண்டுகளுக்கு தாமதமாகிறது என்றாலும் கூட இந்த இரண்டு ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு வரவேண்டிய சம்பளத்தொகை அதாவது உயர்த்தப்பட்ட சம்பளத் தொகை என்பது அவர்களுக்கு அரியர் பணமாக வழங்கப்பட்டு விடும். சம்பள கமிஷன் அமலுக்கு வருவது தாமதமாக தாமதமாக அரியர் பணம் என்பது அதிகரித்துக் கொண்டே செல்லும்.
உதாரணமாக 7ஆவது சம்பள கமிஷன் 2.57 என்ற ஃபிட்மண்ட் ஃபேக்டரை அடிப்படையாகக் கொண்டு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அதுவே 8ஆவது சம்பள கமிஷனிலும், கொண்டு சம்பளம் உயர்த்தப்படுகிறது என வைத்துக்கொண்டால் தற்போது 40,000 ரூபாய் அடிப்படை சம்பளம் வாங்கக்கூடிய ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 1,02,800 ரூபாயாக உயரும்.
இதனோடு வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு அலோவென்சுகளும் அதிகரிக்கும். ஒருவேளை 2028 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தான் சம்பள உயர்வு அமலுக்கு வருகிறது என வைத்துக்கொண்டால், இதே நபருக்கு அவருடைய ஒவ்வொரு மாத சம்பளத்திலும் 68,800 ரூபாயை இந்த 24 மாதங்களுக்கும் கணக்கிட்டு வழங்கும் அப்படி பார்த்தால் இந்த நபர் 15 லட்சம் ரூபாயை அரியர் பணமாக பெறுவார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications