8வது சம்பள கமிஷன்: ரூ.18 லட்சம் கிடைக்கப்போகுது..! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கு?

ஒட்டு மொத்த மத்திய அரசு ஊழியர்களின் ஒரே ஒரு எதிர்பார்ப்பாக இருக்கும் 8-வது ஊதியக் குழுவின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 10 ஆண்டுக்கு ஒரு முறை ஓய்வூதிய குழு அமைக்கப்படும். இந்த முறை 2025-ஆம் ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி அன்று நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஊதியக் குழு அமைக்கப்பட்டது. ஜெய்ப்பூர், சென்னை, புதுச்சேரி மற்றும் சண்டிகர் போன்ற பல நகரங்களில் இதுவரையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

அடுத்த கட்டமாக அக்டோபர் 7, 8 தேதிகளில் பெங்களூரில் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டங்கள் எல்லாம் முடிந்த பின்னர் ஊதியக் குழு இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும்.

8-வது ஊதியக் குழுவின் தற்போதைய நிலை என்ன?: 8-வது ஊதியக் குழுவின் விதிமுறைகளின் படி இதற்கு 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏற்கனவே 10 மாதங்கள் முடிவடைந்துவிட்டன. வருகின்ற 2027-ஆம் ஆண்டின் மே மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

8வது சம்பள கமிஷன்: ரூ.18 லட்சம் கிடைக்கப்போகுது..! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கு?

ஆனால் இதற்கு முன்னர் 6-வது மற்றும் 7-வது ஊதிய குழுக்களைப் போலவே இந்த முறையும் 5 முதல் 6 மாதங்கள் வரை கால அவகாசம் நீட்டிக்கப்படும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனால் 2027-ஆம் ஆண்டின் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

அரசு ஊழியர் சங்கங்களின் பரிந்துரைகளை எல்லாம் ஏற்று ஊதிய குழு விரைவாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் அரியர் மட்டுமல்ல வீட்டு வாடகை படி, போக்குவரத்து படி மற்றும் பிற படிகளும் உயரும். எப்போதெல்லாம் ஃபிட்மென்ட் ஃபாக்டர் உயர்கிறதோ அப்போதெல்லாம் அடிப்படை ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் அகவிலைப்படியும் அதிகரிக்கும்.

Also Read

அரசு ஊழியர்கள் அனைத்து படிகளுக்கும் அரியர் பெற முடியுமா?: ஊதியக் குழு அமல்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டால் அந்த ஊதிய இழப்பிற்கு அரியர் கிடைக்கும். வீட்டு வாடகை படி அடிப்படை ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு முறையும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் அதிகரித்து அடிப்படை ஊதியம் அதிகரிக்கும்போது வீட்டு வாடகை படியும் அதிகரிக்கும். 7-வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி 50%-ஐ எட்டியது. அப்போது வீட்டு வாடகைப் படியும் உயர்ந்தது.

லெவல் 6, லெவல் 8 ஊழியர்களுக்கு எவ்வளவு அரியர் கிடைக்கும்?: ஊதியக் குழு அமல்படுத்தப்படுவதில் தாமதமாகும் மாதங்கள் மற்றும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் அடிப்படையில் தான் அரியர் தீர்மானிக்கப்படும்.

உதாரணமாக லெவல் 6 ஊழியர் ஒருவர் அடிப்படை சம்பளமாக ரூ.35,400 பெற்று வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். 8-வது ஊதிய குழுவின் அமலாக்கம் சுமார் 18 மாதங்கள் வரை தாமதமாகிறது. ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.1 சதவீதமாக இருந்தால்

அடிப்படை சம்பளம் = பழைய அடிப்படை ஊதியம் X ஃபிட்மென்ட் ஃபேக்டர் = ரூ.35,400 X 2.1 = ரூ.74,340

ஊதிய உயர்வு = புதிய அடிப்படை ஊதியம் - பழைய அடிப்படை ஊதியம் = ரூ.74,340 - ரூ.35,400 = ரூ.38,940

அரியர் = ஊதிய உயர்வு X தாமதமாகும் மாதங்கள் = ரூ.38,940 X 18 = 7,00,920

இப்படித்தான் ஆரியர் கணக்கிடப்படும். அதுவே அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில் 20 முதல் 24 மாதங்கள் வரை தாமதம் ஏற்பட்டு ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.15, 2.28 மற்றும் 2.57 ஆகிய விகிதங்களில் நிர்ணயிக்கப்பட்டால் லெவல் 6, லெவல் 7 மற்றும் லெவல் 8 ஊழியர்கள் எவ்வளவு அரியர் பெறுவார்கள் என்பதை பார்ப்போம்.

லெவல் 6 ஊழியர்கள் எவ்வளவு அரியர் பெறுவார்கள்?:

பே லெவல்ஃபிட்மென்ட் ஃபேக்டர்அடிப்படை சம்பளம்ஃபிட்மென்ட் ஃபேக்டரின் படி திருத்தப்பட்ட அடிப்படை சம்பளம்அடிப்படை சம்பள உயர்வு20 மாதங்களுக்கான அரியர் தொகை24 மாதங்களுக்கான அரியர் தொகை
62.15ரூ.35,400ரூ.76,110ரூ.40,710ரூ.8,14,200ரூ.9,77,040
62.28ரூ.35,400ரூ.80,712ரூ.45,312ரூ.9,06,240ரூ.10,87,488
62.57ரூ.35,400ரூ.90,978ரூ.55,578ரூ.11,11,560

ரூ.13,33,872

லெவல் 7 ஊழியர்கள் எவ்வளவு அரியர் பெறுவார்கள்?:

பே லெவல்ஃபிட்மென்ட் ஃபேக்டர்அடிப்படை சம்பளம்திருத்தப்பட்ட அடிப்படை சம்பளம்அடிப்படை சம்பள உயர்வு20 மாதங்களுக்கான அரியர் தொகை24 மாதங்களுக்கான அரியர் தொகை
72.15ரூ.44,900ரூ.96,535ரூ.51,635ரூ.10,32,700ரூ.12,39,240
72.28ரூ.44,900ரூ.1,02,372ரூ.57,472ரூ.11,49,440ரூ.13,79,328
72.57ரூ.44,900ரூ.1,15,393ரூ.70,493ரூ.14,09,860ரூ.16,91,832

லெவல் 8 ஊழியர்கள் எவ்வளவு அரியர் பெறுவார்கள்?:

பே லெவல்ஃபிட்மென்ட் ஃபேக்டர்அடிப்படை சம்பளம்திருத்தப்பட்ட அடிப்படை சம்பளம்அடிப்படை சம்பள உயர்வு20 மாதங்களுக்கான அரியர் தொகை24 மாதங்களுக்கான அரியர் தொகை
82.15ரூ.47,600ரூ.1,02,340ரூ.54,740ரூ.10,94,800ரூ.13,13,760
82.28ரூ.47,600ரூ.1,08,528ரூ.60,928ரூ.12,18,560ரூ.14,62,272
82.57ரூ.47,600ரூ.1,22,332ரூ.74,732ரூ.14,94,640ரூ.17,93,568

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+