8ஆவது சம்பள கமிஷன்: மும்மடங்கு உயர்கிறதா மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம்?

சென்னை: இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் அடிப்படையில் தான் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு அவர்களின் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் மாற்றம் செய்யப்படுகிறது.

8ஆவது சம்பள கமிஷன்: தற்போது 7ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். தற்போதைக்கு மத்திய அரசு 8ஆவது சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அறிவிப்பு தான் வெளியிட்டு இருக்கிறது. இன்னும் இந்த 8ஆவது சம்பள கமிஷனுக்கான குறிப்புரைகள் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.

8ஆவது சம்பள கமிஷன்: மும்மடங்கு உயர்கிறதா மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம்?

அரசு ஊழியர்கள் கோரிக்கை: இந்த சூழலில் மத்திய அரசு 8ஆவது சம்பள கமிஷனுக்கான பணிகளை விரிவு படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்த வண்ணம் இருக்கின்றனர். பொதுவாகவே சம்பள கமிஷன் அமைக்கப்பட்ட உடன் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு ,ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அமைப்பினரிடமும் பரிந்துரைகளைப் பெற்று பின்னர் தற்போது இருக்கும் வாழ்க்கை செலவினம் அரசு ஊழியர்களுக்கு எதற்கெல்லாம் அலோவென்ஸ் வழங்கப்படுகிறது உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்வார்கள்.

ஃபிட்மெண்ட் ஃபேக்டர் : பின்னர் ஃபிட்மெண்ட் ஃபேக்டர் என்பதை நியமனம் செய்வார்கள். இந்த ஃபிட்மெண்ட் ஃபேக்டர் அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் எவ்வளவு உயர்கிறது என்பதே தீர்மானிக்கப்படுகிறது. ஏழாவது சம்பள கமிஷனில் 2.57 என்ற அளவில் ஃபிட்மெண்ட் ஃபேக்டர் கொண்டு சம்பளம் கணக்கிடப்பட்டது .எட்டாவது சம்பள கமிஷனில் 2.86 என ஃபிட்மெண்ட் ஃபேக்டர் கொண்டு சம்பளம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

எவ்வளவு சம்பளம் உயரும்?: 8ஆவது சம்பள கமிஷனில் ஒருவேளை ஃபிட்மெண்ட் ஃபேக்டர் 2.86 என உயர்த்தினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மும்மடங்கு அதிகமாகும். பே லெவல் 1 இல் இருக்கும் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து 51,480 ரூபாயாக உயரும் . அதேபோல பேல் லெவல் 2 ஊழியர்களுக்கான சம்பளம் 19,900 ரூபாயிலிருந்து 56,914 ரூபாய் என உயர வாய்ப்புள்ளது.

மும்மடங்கு உயரும் சம்பளம்: பே லெவல் 3 பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 21,700 ரூபாயில் இருந்து 62,062 ரூபாயாக உயர்ந்துவிடும். லே லெவல் 6இல் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு அடிப்படை சம்பளம் 35,400 ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்ந்துவிடும் . பே லெவல் 10இல் இருக்கும் அதிகாரிகளுக்கு அடிப்படை சம்பளம் 56,100 ரூபாயில் இருந்து 1.6 லட்சம் ரூபாயாக உயரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+