மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட 8ஆவது சம்பள கமிஷன் தன்னுடைய பரிந்துரைகளை வழங்குவதற்கு 18 மாத அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
8ஆவது சம்பள கமிஷன் தற்போது நாட்டில் விலைவாசி நிலவரம் , அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத்திற்கு எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கீடு செய்ய அரசு தயாராக இருக்கிறது என்பன உள்ளிட்டவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு ஃபிட்மண்ட் ஃபேக்டர் என்பதை முடிவு செய்யும். இதனை அடிப்படையாகக் கொண்டுதான் அரசு ஊழியர்களின் சம்பளமும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய தொகையும் உயர்த்தி வழங்கப்படும்.

உதாரணமாக ஃபிட்மண்ட் ஃபேக்டர் 2 என நியமனம் செய்யப்பட்டால் தற்போது உள்ள அடிப்படை சம்பளத்தை இரண்டால் பெருக்கினால் என்ன வருமா அதுதான் புதிய சம்பளமாக இருக்கும். அந்த வகையில் சம்பள கமிஷன் தற்போது பல்வேறு அமைச்சகங்களிடமும் கருத்துக்களை கேட்டு வருகிறது. இதற்கிடையே அரசு ஊழியர்களின் யூனியன்கள் டெல்லியில் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளன.
8ஆவது சம்பள கமிஷனில் தங்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு வேண்டும் என்பது குறித்து அரசு ஊழியர்களுக்கான அமைப்புகள் மிக முக்கியமான ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கின்றன. ஒவ்வொரு 8ஆவது சம்பள கமிஷனில் ஃபிட்மண்ட் ஃபேக்டரை 3.25ஆக உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றன.

அது தவிர ஒவ்வொரு ஆண்டும் ஏழு சதவீத ஊதிய உயர்வு தேவை என வலியுறுத்தியுள்ளன. டெல்லியில் இன்று மத்திய அரசு ஊழியர்களுக்கான கூட்டமைப்பு விவாதம் நடத்த இருக்கிறது. அப்போது பல்வேறு அமைப்புகளும் 8ஆவது சம்பள கமிஷனில் தங்களுடைய கோரிக்கைகள் என்னென்ன என்பதை தெரிவிக்க இருக்கின்றன. இந்த கோரிக்கைகளை ஒரு மனுவாக தயாரித்து மத்திய அரசிடம் வழங்க இருப்பதாக அரசு ஊழியர்களுக்கான யூனியனின் தலைவர் சிவகோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான யூனியன்கள் ஆலோசனை நடக்க உள்ளது என்றும் இதன் பின்னர் மனு தயாரித்து மார்ச் மாத முதல் வாரத்தில் சம்பள கமிஷனிடம் தாக்கல் செய்வோம் என கூறியிருக்கிறார்.
இதற்கிடையே ஃபிட்மண்ட் ஃபேக்டர் 3.25 ஆக கொள்ள வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். அப்படி பார்க்கும்போது தற்போது 7ஆவது சம்பள கமிஷனில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயாக இருக்கிறது 3.25 ஃபிட்மண்ட் ஃபேக்டர் கொண்டால் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 8ஆவது சம்பள கமிஷனில் 58,500 ரூபாயாக உயரும்.
அதேபோல தற்போது ஒவ்வொரு ஆண்டுக்கும் அகவிலைப்படி உயர்வு 5% ஆக உள்ளது இதனை 7% ஆக அஉயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர். மேலும் ஒரு குடும்பம் என்பதை மூன்று பேர் கொண்ட யூனிட்டுகளாக கணக்கிட்டு தான் சம்பள கமிஷன் ஃபிட்மண்ட் ஃபேக்டர் கணக்கிடுகிறது இதனை 5 யூனிட்டுகள் அதாவது ஐந்து பேர் கொண்டது ஒரு குடும்பம் என கணக்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
சிஜிஹெச்எஸ் மருத்துவமனை இல்லாத ஊர்களில் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் மாதாந்திர மெடிக்கல் அலோவென்சை ஆயிரம் ரூபாயிலிருந்து உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றனர். விடுமுறை கால பயண கன்செஸ்ஸன் தொகையை ரொக்க வடிவில் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications