இந்தியாவில் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகை ஆகிய இரண்டும் ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரை அடிப்படையில் தான் வழங்கப்பட்டு வருகிறது.
8ஆவது சம்பள கமிஷன் : ஏழாவது சம்பள கமிஷன் வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் காலாவதி ஆகிறது. வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசினை பொறுத்தவரை 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதமே வெளியிட்டது. ஆனால் இதுவரை சம்பள கமிஷனுக்கான குறிப்புகள் மற்றும் உறுப்பினர்கள் ,தலைவர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடவில்லை.

எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்?: 8ஆவது சம்பள கமிஷன் பணிகள் தொடர்ந்து தாமதம் அடைந்து வருகின்றன. மத்திய அரசு ஊழியர்களும் , ஓய்வூதியதாரர்களும் 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். இந்த சூழலில் ஆம்பிட் கேபிடல் ( Ambit Capital) என்ற தரகு நிறுவனம் 8ஆவது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 முதல் 34 சதவீதம் வரை சம்பளம் உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
ஃபிட்மெண்ட் ஃபேக்டர் : 8ஆவது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் உயரும் என்பது தொடர்பான அனுமானங்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கின்றன. சம்பள கமிஷன் ஃபிட்மெண்ட் ஃபேக்டர் அடிப்படையில் தான் ஊழியர்களுக்கான சம்பளத்தை மாற்றி அமைக்கும். சம்பள கமிஷன் அமைத்து உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்ட பிறகு அவர்கள் ஆய்வு நடத்தி தங்களுடைய பரிந்துரைகளை வழங்கி பின்னர் அது நடைமுறைக்கு வருவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் தேவைப்படும்.
34% வரை உயர்வு: இன்னும் சம்பள கமிஷன் பணிகள் முழுமையாக தொடங்காமல் இருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பளம் கிடைப்பது தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான் ஆம்பிட் கேபிடல் நிறுவனம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை 30 லிருந்து 35 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
1 கோடிக்கும் அதிகமான பயனாளிகள்: ஏழாவது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு 14% சம்பள உயர்வை தந்தது. 8ஆவது சம்பள கமிஷன் 30லிருந்து 34 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கும் என்றும் சுட்டிக்காட்டுகிறது. கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்றும் நுகர்வினை அதிகரிப்பதற்கும் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கும் இந்த முறை 34 சதவீதம் வரை சம்பள உயர்வுக்கு வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
தற்போது மத்திய அரசு பணியில் 44 லட்சம் அரசு ஊழியர்களும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இருக்கின்றனர். 8ஆவது சம்பள கமிஷன் ஃபிட்மெண்ட் ஃபேக்டரை 1.83 லிருந்து 2.64 ஆக வைத்து கொள்ளலாம் என இந்த ஆய்வறிக்கை கணித்துள்ளது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications